/tamil-ie/media/media_files/uploads/2018/06/s546.jpg)
Kalavaani 2 first look poster
சற்குணம் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘களவாணி’. விமல், ஓவியா, சூரி, சரண்யா பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, இளவரசு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ரொமாண்டிக் காமெடி வகையைச் சேர்ந்த இந்தப் படம், சூப்பர் ஹிட்டானது. விமலின் கேரியரில் இன்றுவரை மிகப்பெரிய ஹிட் படம் இதுதான்.
இந்நிலையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு இதன் இரண்டாம் பாகம் 'களவாணி 2' எனும் டைட்டிலில் தயாராகியுள்ளது. விமல், ஓவியாவே மீண்டும் இணைந்து நடித்துள்ள இந்தப் படத்தை, சற்குணமே இயக்கி தயாரித்தும் இருக்கிறார். முதல் பாகம் படம்பிடிக்கப்பட்ட தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதிகளிலேயே இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், இதன் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் மாதவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார். விரைவில் இசை வெளியிடப்படும் என ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
#Kalavaani2FirstLook@Oviyaasweetz@Asarkunam_Dir@ActorVemal@DoneChannel1@CtcMediaboy WISHING THIS WINNING TEAM ... ALLLL THE VERY BEST .. Charming first look.Vimals 25 th film . Congrats bro . pic.twitter.com/8KAab0WZZf
— Ranganathan Madhavan (@ActorMadhavan) June 30, 2018
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.