Kalavani 2 in Tamilrockers: தடைகளை தாண்டி வெளியான களவாணி 2... மொத்த படக்குழுவையும் கடுப்பாக்கிய தமிழ் ராக்கர்ஸ்!

Kalavani 2 Full Movie Leaked in Tamilrockers:முழு படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் தனது இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

Kalavani 2 in Tamilrockers : பல்வேறு தடைகளை தாண்டி  திரைக்கு வந்த களவாணி 2 படத்தை தமிழ் ராக்கர்ஸ் தனது இணையத்தில் வெளியிட்டு படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

களவாணி 2010ல் விமல் ஓவியாநடிப்பில் இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற படமாகும். இப்படம் ஓவியாவின் அறிமுகப்படமாக அமைந்தது. விமலுக்கு ஒரு திருப்புமுனைப் படமாகவும் அமைந்தது.

ஓவியா பிக் பாஸில் புகழ் பெற்ற பிறகு தற்போது களவாணி 2 அதே நடிகர்கள் கொண்டு உருவாகியுள்ளது. அந்தக்களத்தை மட்டும் மையமாக கொண்டு கதைத் தொடர்ச்சி இல்லாமல் முற்றிலும் புதிய படமாக  களவாணி 2 படத்தையும் உருவாக்குவதாக இயக்குனர் சற்குணம் தெரிவித்திருந்தார்.

Jyothika’s Raatchasi Movie Leaked in Tamilrockers

இப்படத்தில் விமல் ஓவியா சரண்யா பொண்வண்ணன், ரோபோ சங்கர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.  இந்நிலையில், படம் கடந்த வாரம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில் படத்திற்கு ஹைஹோர்ட் தடை விதித்தது. கடந்த மாதம் லிங்கா பிரச்சனையில் பெரிதும் பேசபட்ட சிங்காரவேலனிடம் நடிகர் விமல் களவானி 2 படத்தின் பேரில் கடன் பெற்றதாக கூறி அதை திருப்பி தந்துவிட்டே படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார்.

Kalavani 2 Full Movie Leaked in Tamilrockers for Free Download:

விமல் மீது இந்த விசயத்தில் சற்குணம் கோபமானாதாக கூறப்பட்டது. எல்லாப் பிரச்சனைகளையும் முடித்து ஒருவழியாக படம் திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், முழு படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் தனது இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.  இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.  படம் குறித்த விமர்சனங்கள் கலவையாக வந்துக் கொண்டிருக்கின்றன.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

×Close
×Close