Advertisment
Presenting Partner
Desktop GIF

கல்கி 2898 படத்தில் கிருஷ்ண பகவானாக நடித்தது இவர் தானா?

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘கல்கி 2898’. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உட்பட பலர் நடித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
kalki 2898 ad

Kalki 2898 AD Movie

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘கல்கி 2898’. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உட்பட பலர் நடித்துள்ளனர்.

Advertisment

சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். மகாநதி (நடிகையர் திலகம்) திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த நாக் அஷ்வின் இயக்கிய இப்படத்தின் டிரெய்லர் வெளியானது முதலே எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வந்தது.

இந்நிலையில் ஜூன் 27 அன்று கல்கி 2898’ படம் திரையரங்குகளில் வெளியானது.
அறிவியல் - புராண கதை மிக்சிங்கில் உருவான இப்படம் அதன் அட்டகாசமான கிராஃபிக்ஸ் மற்றும் மேக்கிங் காட்சிகளில் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

மகாபாரத்தின் குருஷேத்ர போரிலிருந்து படம் தொடங்குகிறது. 
படத்தில் அஸ்வத்தாமா கிருஷ்ணரை போர்க்களத்தில் எதிர்கொள்ளும் ஒரு முக்கியமான காட்சி உள்ளது. இதில் பகவான் கிருஷ்ணராக நடித்தது யார் என்பது சஸ்பென்ஸாக வைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த நடிகரே அதை ரிவில் செய்துள்ளார்.

Krishnakumar

சூரரைப் போற்று படத்தில் சூர்யாவின் நண்பனாக நடித்த கிருஷ்ண குமார் தான் கல்கி 2898 ஏ.டி படத்தில் கிருஷ்ணராக நடித்துள்ளார். 
கல்கி 2898 ஏ.டி படத்தின் முதல் காட்சியில் நடித்ததை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தனது இன்ஸ்டா ஸ்டோரியில் அவர் பதிவிட்டுள்ளார். 

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் ஆக்ஷன் கொரியோகிராஃபர் என பன்முகத்திறமை கொண்ட கிருஷ்ணகுமார் பாலசுப்ரமணியன், 2019 ஆம் ஆண்டு காதலாகி படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவருக்கு ரோகினி ராவ் என்ற மனைவியும். அதியா என்ற மகளும் உள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Prabhas
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment