Advertisment
Presenting Partner
Desktop GIF

ஒரு குழந்தையை வசப்படுத்த 3 பேர் போட்டி; யாருடைய லட்சியம் நிறைவேறியது? - கல்கி திரைவிமர்சனம்

படத்தில் சிறிது நேரமே வந்தாலும் நடிப்பில் நம்மை நடுங்க வைக்கிறார் உலகநாயகன் கமல்ஹாசன். படத்தின் ஒட்டுமொத்த கதையும் தீபிகா படுகோனை சுற்றித்தான் நகர்கிறது. அந்த ரோலுக்கு தன் நடிப்பால் உயிர்கொடுத்திருக்கிறார்.

author-image
WebDesk
New Update
Kalki 2898 AD Movie Review in tamil

மொத்தத்தில் சில குறைகள் இருந்தாலும் ஹாலிவுட் படத்திற்கு இணையான ஒரு இந்திய படமாக நம்மை மிரள வைக்கிறது இந்த கல்கி.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நவீன் சரவணன்

Advertisment

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியாகியுள்ள படம் கல்கி. இப்படத்தின் விமர்சனம் குறித்து இங்கு பார்க்கலாம். 

கதைக்களம்: 

மகாபாரதப் போரில் கவுரவர்கள் சார்பாக பாண்டவர்களை எதிர்த்து போரிடுகிறார் த்ரோணாச்சாரியார் மகன் அஸ்வத்தாமா (அமிதாப் பச்சன் ). பாண்டவர்களுக்கு பிறக்கவிருந்த குழந்தையை வயிற்றிலேயே பிரம்மாஸ்திரத்தை வைத்து  கொல்கிறார். இதனால் கோவமடைந்த கிருஷ்ணன் அமிதாப் பச்சனுக்கு தண்டனையாக சாகாவரத்தை வழங்குகிறார். இதற்கு விமோச்சனமாக கலியுகத்தில் கிருஷ்ணன் மீண்டும் அவதாரம் எடுக்கும்போது அவரை காப்பாற்றினால் மட்டுமே இந்த சாபத்தில் இருந்து விடுபடமுடியும் என்ற நிலை ஏற்படுகிறது.

அந்த போர் முடிந்து சுமார் 6 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு நடப்பதாக கதை நகர்கிறது. உலகத்தின் கடைசி நகரமாக மிஞ்சியிருக்கிறது காசி. அங்கிருக்கும் மக்கள் அனைவரும் சுப்ரீம் யாஸ்கினின் (கமல்ஹாசன்) கொடூர ஆட்சிக்கு பயந்து அடிபணிந்து வாழ்கிறார்கள். ஒருபக்கம் பஞ்சத்திலும் மறுபக்கம் அதிகாரம், செல்வம் படைத்த மக்கள் மட்டும்  ’காம்பிளக்ஸ்’ என்ற இடத்திலும் வாழ்கிறார்கள். எப்படியாவது பணத்தை சேர்த்து தானும் இந்த காம்பிளக்ஸில் பணக்கார வழக்கை வாழ வேண்டும் என்பதே நாயகன் பைரவாவின் (பிரபாஸ்) கனவு. 

சுப்ரீம் யாஸ்கினை அழிக்கும் சக்தி படைத்த அந்த குழந்தையை தனது கருவில் சுமந்து வருகிறார் சுமதி (தீபிகா படுகோன்). எப்படியாவது இந்தக் குழந்தையை அழித்து பிராஜெக்ட் கே என்கிற தனது குறிக்கோளை நிறைவேற்ற வேண்டும் என்று துடிக்கிறார் யாஸ்கின்.  அதே குழந்தையைக் காப்பாற்றி தனது சாபத்தை விடுவிக்க பல ஆண்டுகளாக காத்திருக்கிறார் அஸ்வத்தாமா (அமிதாப் பச்சன்). இந்தக் குழந்தையை கண்டுபிடித்து அதன் வழியாக தனது கனவை நிறைவேற்றிக் கொள்ள நினைக்கிறார் பைரவா. இவர்களில் யாருடைய லட்சியம் நிறைவேறியது என்பதே மீதி கதை. 

நடிகர்களின் நடிப்பு: 

தொடர்ந்து பிரமாண்ட படங்களில் சீரியஸ் ரோலில் மட்டுமே நடித்து வந்த பிரபாஸ் இப்படத்தில் பல இடங்களில் காமெடி செய்திருக்கிறார். முதல் பாதி முழுவதும் அடக்கி வாசிக்கும் பிரபாஸின் கதாபாத்திரம் இரண்டாம் பாதியில் விஸ்வரூபம் எடுக்கிறது. பிரபாஸின் கதாபாத்திரத்திற்கு ஒரு மிகப்பெரிய ட்விஸ்ட் வைத்திருக்கிறார்கள். அது நிச்சயம் ரசிகர்களை கொண்டாட வைக்கும். 

படத்தின் இரண்டாவது ஹீரோவாக அஸ்வத்தாமாவாக அமிதாப் பச்சன் கலக்கியிருக்கிறார். குறிப்பாக சண்டை காட்சிகளில் மிரள வைக்கிறார். இப்படத்தின் ஒட்டுமொத்த கதையும் தீபிகா படுகோனை சுற்றித்தான் நகர்கிறது. அந்த ரோலுக்கு தன் நடிப்பால் உயிர்கொடுத்திருக்கிறார். படத்தில் சிறிது நேரமே வந்தாலும் நடிப்பில் நம்மை நடுங்க வைக்கிறார் உலகநாயகன் கமல்ஹாசன். அன்னா பெனுக்கும் பேர் சொல்லும்படியான கதாபாத்திரம். பிரபாஸின்  வாகனமான புஜ்ஜிக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்திருப்பது ரசிக்க வைக்கிறது. இது தவிர படத்தில் ஏகப்பட்ட சர்ப்ரைஸ் கதாபாத்திரங்கள் நம்மை குதூகலப் படுத்துகிறது. 

இயக்கம் - இசை 

புராணத்தையும், அறிவியலையும் கலந்து இதுபோன்ற ஒரு பிரமாண்ட கதையை படமாக நம் கண்முன் கொண்டு வந்த நாக் அஸ்வினுக்கு பெரிய பாராட்டுக்கள். திரைக்கதை சொல்லப்பட்டிருக்கும் விதமும், அதை காட்சிப்படுத்திருக்கும் பிரமாண்ட காட்சியமைப்புகளையும் பார்க்கும்போது இயக்குனருக்கும் அவருடையும் குழுவுக்கும் மிகப்பெரிய சல்யூட் வைக்க தோன்றுகிறது. 

ஜோர்ட்ஜே ஸ்டோஜில்கோவிச்சின் ஒளிபதிவு பிரமாண்ட படைப்பின் உச்சம். ஒரு பக்கம் பக்கம் புராணக் கதைகளில் வரும் அசாத்திய சக்திகளை கொண்ட கதாபாத்திரங்கள், மறுபுறம் அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் கதாபாத்திரங்கள் என அறிவியலையும் கற்பனையையும் இணைத்திருப்பது தான் இப்படத்தின் தனிச்சிறப்பு. சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை ஒவ்வொரு காட்சியையும் மெருகேற்றியுள்ளது. பாடல்கள் பெரிய அளவில் எடுபடவில்லை.

படத்தின் பிளஸ்:

⦿ உலகத்தரமான மேக்கிங் மற்றும் விசுவல்ஸ் 

⦿ ஆக்‌ஷன் காட்சிகள் 

⦿ இரண்டாம் பாதி 

⦿ நடிகர்களின் நடிப்பு 

⦿ பிரமாண்டமான காட்சிகள் 

⦿ வி.எஃப்.எக்ஸ் மற்றும் சி.ஜி (VFX & CG)

படத்தின் மைனஸ்:

⦿ படத்தின் நீளம் 

⦿ சற்று குழப்பமான முதல் பாதி. 

மொத்தத்தில் சில குறைகள் இருந்தாலும் ஹாலிவுட் படத்திற்கு இணையான ஒரு இந்திய படமாக நம்மை மிரள வைக்கிறது இந்த கல்கி. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Movie Review
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment