New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/10/Kalki-Resize.jpg)
Bollywood star Kalki Koechlin shares her Tamilnadu house picture goes viral
இதற்குப் 'பாரம்பரிய டச்' கொடுக்கும் வகையில் கற்களால் செதுக்கப்பட்ட நடைபாதை என கல்கியின் தமிழ்நாடு வீடு பார்ப்பதற்கே கொள்ளை அழகு.
Bollywood star Kalki Koechlin shares her Tamilnadu house picture goes viral
Kalki Koechlin Tamil news: மேடை நாடகக் கலைஞர், நடிகை, பாடலாசிரியர், எழுத்தாளர் எனப் பன்முக திறமைசாலி கல்கி கோச்சலின். சமூக நலன் பிரச்சனைகளுக்குக் குரல் கொடுப்பவரும்கூட. பாலிவுட் திரைப்படங்களில் தனக்கென தனி முத்திரையைப் படைத்திருக்கும் கல்கி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம்ம ஆக்டிவ். அந்த வரிசையில், சமீபத்தில் அவர் அப்லோட் செய்தப் புகைப்படம் மிகவும் வைரலாகியுள்ளது.
தமிழ்நாட்டில் இருக்கும் தன்னுடைய வீட்டை 'க்ளிக்' செய்து, 'இதயம் இங்கே..' என்ற கேப்ஷனோடு பகிர்ந்திருக்கும் புகைப்படம்தான் அது. வாசலில் நின்றுகொண்டிருக்கும் கல்கியின் செல்ல நாய் மற்றுமொரு ஹயிலைட். இதனைப் பார்த்த அவருடைய ரசிகர்கள், தங்களின் விர்ச்சுவல் இதயங்களால் அவருடைய இன்ஸ்ட்டா பக்கத்தை நிரப்பியுள்ளனர்.
கல்கி கோச்சலின் ஸ்வீட் ஹோம்
பச்சை புல்வெளிகளுக்கு மத்தியில் பாரம்பரியமிக்க அழகிய வீடு. வாசலில், செதுக்கப்பட்ட பிரமிக்கவைக்கும் பழமையான கதவு. வீட்டின் வசீகரத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்லும் மரக்கதவுகள் மற்றும் ஜன்னல்கள். இதற்குப் 'பாரம்பரிய டச்' கொடுக்கும் வகையில் கற்களால் செதுக்கப்பட்ட நடைபாதை என கல்கியின் தமிழ்நாடு வீடு பார்ப்பதற்கே கொள்ளை அழகு. தற்போது அவர் தங்கியிருக்கும் இந்த வீட்டின் புகைப்படத்தைப் பதிவிட்டு, தமிழ்நாடு மீதான தன் அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார் கல்கி.
மேலும் அந்த வீட்டிற்கு முன், கல்கியின் செல்ல வளர்ப்பு நாய் கியாரா இருக்கும் காட்சி, ஒட்டுமொத்த புகைப்படத்தையும் மெருகேற்றிவிட்டது. இதனோடு கல்கி குறிப்பிட்டிருக்கும் கேப்ஷன் அனைத்து நெட்டிசன்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்று, ஹார்டுகளை குவித்து வருகின்றனர்.
கவுதம் மேனன், சுதா கோங்கரா, விக்னேஷ் சிவன் மற்றும் வெற்றி மாறன் இணைந்து இயக்கும், தமிழ் நெட்ஃப்ளிக்ஸ் ஒரிஜினல் படமான 'பாவ கதைகள்' திரைப்படத்தில் தற்போது கல்கி நடித்து வருகிறார். இவரோடு பிரகாஷ் ராஜ், சாந்தனு பாக்யராஜ், சாய் பல்லவி, காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட தென்னிந்திய முன்னணி நடிகர்களும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். காதல், பெருமை, மரியாதை உள்ளிட்ட மனித கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.