/tamil-ie/media/media_files/uploads/2018/12/kalyana-vayasu.jpg)
kalyana vayasu, கல்யாண வயசு
கோலமாவு கோகிலா படத்தில் இடம்பெற்று பல்லாயிரக்கணக்கானோர் கேட்டு ரசித்த கல்யாண வயசு பாடல் வீடியோவை யூடியூப் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது.
நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தில் யோகிபாபு அவரை காதலிப்பது போல் இடம் பெற்ற கல்யாண வயசுதான் பாடல் யூடியூப்பில் வெளிவந்த போதே வைரல் ஹிட் ஆனது. இன்னும் சொல்லப்போனால் யோகிபாபுவின் மார்கெட் ஏறியதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று இந்த பாடல். யூடியூபில் இப்பாடலை சுமார் 50 மில்லியன் பேர் ரசித்து பார்த்திருந்தனர்.
கல்யாண வயசு பாடல் நீக்கம்
அதே சமயம் இந்த பாடல் காப்பி அடிக்கப்பட்டது என்றும், வெளிநாட்டு ஆல்பம் ஒன்றிலிருந்து காப்பி அடித்து அனிருத் இப்படாலை உருவாக்கினார் என சமூக வலைத்தளங்களில் அப்போது செய்திகள் வெளிவந்தது. ஆனால், அதை அனிருத் மறுத்தார். இந்நிலையில், காப்பி ரைட் உரிமையை காரணம் காட்டி இந்த பாடலை யூடியூப் நிறுவனம் தூக்கி விட்டது.
அப்ப காப்பி என வெளியான செய்தி உண்மைதான் போலிருக்கிறது என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். யூடியூப்-ல் இருந்து நீக்கியிருந்தாலும், இப்பாடல் பிற இணையத்தளங்களில் உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.