மெட்டி ஒலியில் தொடங்கிய கோபியின் பயணம்! சன் டிவியில் தனக்கென தனி இடத்தை பிடித்த கதை இதுதான்

சீரியலில் கூட யதார்த்தமான குடும்ப காட்சிகளை இயல்போடு காட்டுவார்.

kalyana veedu gopi suntv : சின்னத்திரை சீரியலில் இதுவரை எந்த ஒரு சீரியலும் செய்யாத சாதனையை சன் டிவி மெட்டி ஒலி சீரியல் செய்தது. மெட்டி ஒலி தொடர் கடந்த 2002 ஆம் ஆண்டில் இருந்து 2005 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 3 ஆண்டுகள் சன் டீவியில் ஓளிப்பரப்பாகி மக்களின் ஆரவார செல்வாக்கைப் பெற்றது. தமிழ் தொலைக்காட்சி உலகில் முதன் முதலில் 1000 எபிசோட்கள் ஒளிப்பரப்பப்பட்ட தொடரும் இதுவே ஆகும்.

இந்த பெருமைக்கெல்லாம் காரணம் இயக்குனர் திருமுருகன் தான். இவரை மெட்டி ஒலி கோபி என்றால் தான் பலருக்கும் தெரியும். மெட்டி ஒலி சீரியல் கொடுத்த ரீட்ச் இவரை பெரிய திரை வரை அழைத்து சென்றது.

நடிகர் பரத்துக்கு மிகப் பெரிய பிரேக் கொடுத்த எம்டன் மகன் இவரின் இயக்கத்தில் வெளிவந்தது தான். முதல் படமும் சூப்பர் டூப்பர். எங்கே கோபி சீரியலை விட்டு படத்தில் கவனம் செலுத்தி விடுவாரோ என யோசித்த போது அடுத்தடுத்து சன் டிவியிலேயே நாதஸ்வரம், குல தெய்வம் இப்போது கல்யாண வீடு என கலக்கிக் கொண்டிருக்கிறார்.

நாதஸ்வரம் தொடரின் ஆயிரமாவது எபிசோட் காரைக்குடியில் இருந்து நேரடியாக ஒளிபரப்பப்பட்டு கின்னஸ் சாதனைப் பெற்றது. முழுக்க முழுக்க காரைக்குடி, சுற்றுவட்டாரப்பகுதிகளிலும், குற்றாலம் பகுதிகளிலும் எடுத்த தொடர் இது என்ற பெருமைக்குரியது. இந்தத் சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது.

சன் டிவியில் 7.30 மணி என்றால் அது கோபின் நேரம் என பிரிக்கப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டு மகளிருக்கு மட்டுமே செல்லப்பிள்ளையாக இருந்த திருமுருகன் சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களை ஆட்சி செய் தொடங்கினார்.கோபி தன்னுடைய சீரியல்களில் ரொமான்ஸ், ஆக்‌ஷன், செண்ட்டிமெண்ட் என நவரசமும் கலந்த நடிப்பை வெளிக்கொணர்ந்து வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் திடீரென்று ட்ரெண்டாகியது.

கோபி நடித்த காட்சிகளை காட்சிகளை தேடிக் கண்டு பிடித்து நெட்டிசன்கள் வைரலாகினர். கோபியின் இந்த சீரியல் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் அவருக்கு குடும்பத்தின் மீது இருக்கும் அதிக பற்று தான். அதனாலயே சீரியலில் கூட யதார்த்தமான குடும்ப காட்சிகளை இயல்போடு காட்டுவார். சன் டிவியில் கோபிக்கு சிறந்த இயக்குனர் விருது வழங்கிய போது தனது மனைவியை மேடை ஏற்றி அழகுப்பார்த்தார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close