scorecardresearch

விவாகரத்தான விஜய், விக்ரம் ஹீரோயின்: உறுதிப்படுத்திய கணவர்…

நாகர்ஜுனா தொகுத்து வழங்கிய தெலுங்கு ‘பிக் பாஸ் 4’ நிகழ்ச்சியில் சூர்யா கிரண் பங்கேற்று முதல் வாரத்திலேயே வெளியேற்றப்பட்டார்.

Kalyani Surya Kiran divorce
கல்யாணி – சூர்யா கிரண்

இயக்குநர் ஃபாசில் இயக்கத்தில், தளபதி விஜய்யின் ’கண்ணுக்குள் நிலவு’ திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை கல்யாணி என்கிற காவேரி. அந்தப் படத்தின் ஃப்ளாஷ் பேக்கில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பார். முதன்மை ஹீரோயினாக ஷாலினி நடித்திருந்தார். அதன்பின் விக்ரமின் காசி, சரத்குமாரின் சமுத்திரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் கல்யாணி.

’நீதிமன்றத்தின் நியாயமான உத்தரவுகளை தாழ்மையுடன் ஏற்றுக் கொள்கிறேன்’: சூர்யா

குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பை தொடங்கிய இவர், மலையாளம் மற்றும் தெலுங்கிலும் மிக பிரபலமான நடிகையாக வளம் வந்தார். கடைசியாக தமிழில் விஜய் சேதுபதி நடித்த கருப்பன் திரைப்படத்தில் பசுபதியின் மனைவியாக நடித்திருந்தார்.

பின்னர் நடிகரும் இயக்குனருமான சூர்யா கிரணை காதலித்து 2010-ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். இருப்பினும் இந்த ஜோடி விவாகரத்து பெற்று விட்டதாக கடந்த சில ஆண்டுகளாகவே செய்திகள் வலம் வருகின்றன. ஆனால் அவர்கள் அதைப் பற்றி ஒருபோதும் வாய் திறக்கவில்லை.

இந்நிலையில் தங்களுக்கு விவாகரத்து ஆனதை சூர்யா கிரண் தற்போது உறுதிப்படுத்தியுள்ளார். நாகர்ஜுனா தொகுத்து வழங்கிய தெலுங்கு ‘பிக் பாஸ் 4’ நிகழ்ச்சியில் சூர்யா கிரண் பங்கேற்று முதல் வாரத்திலேயே வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர் நடந்த நேர்காணல்களின் போது, பல ஆண்டுகளுக்கு முன்பே கல்யாணி அவரை விட்டு விலகியிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார் சூர்யா. இருப்பினும் கல்யாணி திரும்ப தன்னுடன் இணைந்து வாழ வேண்டும் என்பதையே தான் விரும்புவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

e-பைக் சர்வீஸ் இப்போ சென்னை மெட்ரோவுக்கும் வந்தாச்சு!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சுஜிதாவின் உடன் பிறந்த சகோதரர் தான் சூர்யா கிரண் என்பது குறிப்பிடத்தக்கது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Kalyani kaveri surya kiran divorce confirmed

Best of Express