மலையாளம், தெலுங்கு, தமிழ் மொழிகளில் 'பரவாலயே இந்த பொண்ணு' என்று தனது நடிப்பால் கவனிக்க வைத்திருப்பவர் கல்யாணி ப்ரியதர்ஷன்
இயக்குனர் பிரியதர்ஷன் - லிஸி தம்பதியின் மகள் இவர் என்பது உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும்.
சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் ஹீரோ திரைப்படம் மூலம் தமிழில் ஹீரோயினாக லான்ச் செய்யப்பட்டார்.
ஆனால், அதற்கு முன்னதாகவே விக்ரம் நடித்த 'இருமுகன்' படத்தில் புரொடக்ஷன் டிஸைன் பிரிவில் உதவியாளராக பணிபுரிந்திருக்கிறார்
2017ம் ஆண்டு தெலுங்கில் நடித்த ஹலோ தான் இவரது முதல் திரைத் தோன்றல். இப்படத்துக்காக சிறந்த புதுமுக நடிகை எனும் விருதை தனது ஹேண்ட் பேக்கில் ஒளித்துக் கொண்ட அழகி இவர்
அடுத்ததாக, தமிழில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள (?) மாநாடு படத்தின் ஹீரோயினாக கமிட்டாகி இருக்கிறார். ஒருவேளை அறிவித்தபடி இந்த படம் எடுக்கப்பட்டு, சிம்பு நடித்து ரிலீஸானால் அதை விட ஒரு சிறந்த தருணம் கல்யாணிக்கு இருக்க முடியாது
சிம்புவின் மாஸ், வெங்கட்பிரபுவின் இயக்கம் என இரண்டும் ஒன்று சேர்ந்தால் படம் நிச்சயம் சக்சஸ் தான். அப்படி சக்சஸ் ஆகும் பட்சத்தில் வெற்றிப் பட ஹீரோயினாகிவிடுவார். இங்கே ஹீரோயினாக ஜெயிக்க வேண்டுமெனில், அவர்களுக்கு தேவைப்படும் முதல் தகுதியே இதுதானே.
அதேசமயம் துல்கர் சல்மான் தமிழில் நடிக்கும் வான் படத்திலும் ஹீரோயினாக கமிட்டாகி இருக்கிறார் கல்யாணி.
இந்த புதிய ஆண்டு அவருக்கு அடுத்தடுத்த வெற்றிகளை கொடுத்து, மறைந்த நடிகை சௌந்தர்யா போன்ற பாந்தமான முக அமைப்பு கொண்ட இன்னொரு ஹீரோயின் தமிழ் சினிமாவில் கோலோச்ச வாழ்த்துகள்.