Kamal 60 Celebrations: நடிகர் கமல்ஹாசன் சினிமா துறையில் அறுபதாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறார். இது உலகில் எந்த நடிகருக்கும் அவ்வளவு எளிதில் கிடைக்காத மிகப்பெரிய மைல்கல்.
Advertisment
இதையொட்டி ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மூன்று நாள் பிரமாண்ட கொண்டாட்டத்தை நடத்துகிறது. கமலின் பிறந்த நாளான நவம்பர் 7-ஆம் தேதி, தனது தந்தை சீனிவாசனின் சிலையை அவர்களின் சொந்த ஊரான பரமகுடியில் திறக்க உள்ளார். நவம்பர் 8-ஆம் தேதி சத்யம் தியேட்டரில் 'ஹே ராம்' சிறப்புத் திரையிடல் மற்றும் கமலுடன் உரையாடல் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நவம்பர் 17-ஆம் தேதி சென்னை நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் இசைஞானி இளையராஜாவின் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்கிறார். இதற்காக கமல்ஹாசன் பல்வேறு அவதாரங்களில் ரஜினி, இளையராஜா, அஜித் மற்றும் விஜய் ஆகியோருடன் இருக்கும்படியான ஓவியத்தில் சிறப்பு அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் கமலின் 60-ம் ஆண்டு திரை வாழ்க்கையைக் கொண்டாடும் நிகழ்ச்சியில் விஜய், அஜித் இருவருமே கலந்துக் கொள்வார்கள் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது மட்டும் நடந்தால் பெரிய நட்சத்திரங்கள் ஒன்றாக கலந்துக் கொள்ளும் அரிய தருணங்களில் கமல் 60 கொண்டாட்டமும் இடம் பிடிக்கும். அனைத்து பொது நிகழ்ச்சிகளையும் தவிர்க்கும் அஜித், சினிமாவில் தனது இன்ஸ்பிரேஷனான கமலுக்காக தனது கொள்கையை மாற்றிக் கொள்வார் என்றே தெரிகிறது!