/tamil-ie/media/media_files/uploads/2018/01/Kamal.jpg)
Tamil nadu news today live
Kamal Haasan 60: நடிகர் கமல்ஹாசன் இந்தியாவின் சிறந்த நடிகர் என தனது சமகாலத்து நடிகர்களால் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர். நேற்று அவர் தனது 65 வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அதோடு கமல் சினிமாவுக்கு அடியெடுத்து வைத்து 60 ஆண்டுகள் ஆகிறது. இதை ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று, தனது சொந்த ஊரான பரமகுடியில் தந்தை டி.சீனிவாசனின் சிலையை திறந்து வைத்தார் கமல் ஹாசன்.
அப்போது சிறந்த நடிகராக கமல் யாரை நினைக்கிறார் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “தமிழில் ஒருவரல்ல, பலருக்கு திறமை இருக்கிறது. ஆனால் சற்று பறந்து விரிந்து சிந்தித்தால், மலையாளத்தைச் சேர்ந்த ஃபஹத் பாசில், இந்தியில் நவாசுதீன் சித்திக் மற்றும் ஷஷாங்க் அரோரா ஆகியோர் எனக்குப் பிடித்தவர்கள்” என்றார் கமல். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'பேட்ட' திரைப்படத்தில் நடித்திருந்த நவாசுதீன் சித்திக், கமலின் 'ஹே ராம்' படத்தில் சிறிய பாத்திரத்தில் நடித்திருந்தாராம். ஆனால் எடிட்டிங்கில் அவரின் சீன்கள் வெட்டப்பட்டதால், நவாசுதீன் ஏமாற்றமடைந்து விட்டதாகவும் கமல் குறிப்பிட்டார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/11/Kamal-Haasan-Favorites-1.jpg)
ஷஷாங்க் அரோராவைப் பற்றிக் கூறும்போது, தனது ஐகான் மற்றும் வழிகாட்டியான நாகேஷை ஷஷாங்க் நினைவூட்டுவதாகவும், மிகச் சிறிய வயதிலேயே சிறந்த திறமைசாலியாக தன்னை நிரூபித்துள்ளார் என்றும் கூறினார். இதைத் தொடர்ந்து தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனலின் புதிய அலுவலகத்தை இன்று திறந்து வைக்கும் கமல், பின்னர் முக்கியமான அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.