Advertisment
Presenting Partner
Desktop GIF

2கே கிட்ஸ் கொண்டாடும் வெற்றி... ரசிகர்கள் பார்வையில் 'ஆளவந்தான்' ரீ ரிலீஸ்!

'ஆளவந்தான்' ரீ ரிலீஸ் ஒட்டி ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகிறார்கள். படம் நேற்று வெளியான நிலையில், அது தொடர்பான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

author-image
WebDesk
New Update
Kamal Haasan Aalavandhan tamil move re release fans reaction

கடந்த 2001ல் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் 'ஆளவந்தான்'.

தமிழ் திரையுலகில் உச்சநட்சத்திரங்களாக வலம் வரும் கமல்ஹாசன் மற்றும் ரஜிகாந்த் ஆகியோரின் 'ஆளவந்தான்' மற்றும் 'முத்து' படங்கள்  ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன. நேற்று முதல் திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்த திரைப்படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்து வருகிறார்கள். 

Advertisment

கடந்த 2001ல் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் 'ஆளவந்தான்'. இப்படத்திற்கு கமல்ஹாசன் தான் திரைக்கதை எழுதினார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார். இந்த படம் உருவான காலத்தில் அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்டது. ஆனால், இந்த படத்திற்கு எதிர்பார்க்கப்பட்ட வரவேற்பு கிடைக்கவில்லை.

இதைத்தொடர்ந்து 22 வருடங்களுக்கு பிறகு 'ஆளவந்தான்' திரைப்படத்தின் டிஜிட்டல் வெர்ஷன் உருவாக்கப்பட்டு நேற்று உலகம் முழுவதும் ஆயிரம் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படத்தின் முதல் காட்சியில் கமல்ஹாசன் எண்ட்ரியின் போது ரசிகர்கள் கற்பூரம் காண்பித்து உற்சாகமாக கொண்டாடினர். இப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பை கொடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 'ஆளவந்தான்' ரீ ரிலீஸ் ஒட்டி ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகிறார்கள். படம் நேற்று வெளியான நிலையில், அது தொடர்பான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். 

ஆளவந்தான் சிறப்புக் காட்சியில் திரையுலகப் பிரபலங்கள் பங்கேற்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Kamalhaasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment