Advertisment

’கமல் ஹாசனை பார்த்து பிரமித்தேன்’: ஹாலிவுட் நடிகை ட்வீட்

மைக்கேல் வெஸ்ட்மோர் உடனான கமல்ஹாசனின் தொடர்பு, இயக்குனர் ஷங்கரின் இந்தியன் (1996) படத்துக்கான ஒப்பனையில் இருந்து தொடங்கியது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Mckenzie Westmore on Kamal Haasan

Mckenzie Westmore on Kamal Haasan

நடிகர் கமல்ஹாசன் தனது திரைப்படங்களுக்கு தானே மேக்கப் போட்டுக் கொள்கிறார் என்பதையும், அகாடமி விருது பெற்ற ஒப்பனை கலைஞரான மைக்கேல் வெஸ்ட்மோர் அவர்களால் பயிற்சியளிக்கப்பட்டார் என்பதையும் மிகச் சிலரே அறிந்திருக்கிறார்கள். இது ட்விட்டர் வழியாக மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Advertisment

டாஸ்மாக் திறப்புக்குப் பின் தமிழகத்தில் அதிகரிக்கும் வன்முறைகள், விபத்துகள்

ஒரு ட்விட்டர் நூலில், ’ஸ்டார் ட்ரெக்’ படபிடிப்பின் போது, கமல்ஹாசன் 30 நாட்களுக்கு மேலாக மைக்கேல் வெஸ்ட்மோரின் உதவியாளராக பணிபுரிந்ததை ரசிகர் ஒருவர் நினைவு கூர்ந்தார். மைக்கேல் வெஸ்ட்மோரின் மகளும் நடிகையுமான மெக்கன்சி வெஸ்ட்மோரின் கருத்தை அந்தப் பதிவு விரைவில் பெற்றது. பேஸன்ஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில், ஷெரிடன் கிரேன் என்ற கதாபாத்திரத்தில் பெயர் பெற்றவர் மெக்கன்சி.

”ஒரு குழந்தையாக, கமல் இந்தியாவில் இருந்து அழகான பரிசுகளுடன் வீட்டிற்கு வந்தது எனக்கு நினைவிருக்கிறது. நான் எப்போதுமே அவரைப் பார்த்து பிரமித்து போவேன். லாஸ் ஏஞ்சல்ஸ் வீட்டில் அவரைப் பார்ப்பது ஒரு கனவாக இருந்தது. புகைப்படங்களை தேடுகிறேன்” என்று ட்வீட்டி இருந்தார் மெக்கன்ஸி. பின்னர் தனது வாக்குறுதியைக் கடைப்பிடித்து, 2 படங்களைப் பகிர்ந்துக் கொண்டார். ஒரு படத்தில் கமலுடன் இருக்கிறார் மெக்கன்ஸி. இது விஸ்வரூபம் (2013) படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டது. இன்னொன்று கமல் பரிசளித்த ஒரு இந்திய உடையோடு, தனது அப்பாவுடன் இருக்கும் குழந்தைப் பருவ படம்.

”கமல்ஹாசனை எனக்கு நன்றாகத் தெரியுமா என்று பலர் கேட்டிருக்கிறார்கள். நான் குழந்தையாக இருந்தபோது என் அப்பா அவருக்கு ஒப்பனைகளை உருவாக்கிக் கொண்டிருந்தார். நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். ஆனால் கடைசியாக நான் கமலை சில ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தேன். இரண்டாவது புகைப்படம் கமல் பரிசாக வழங்கிய அழகான ஆடையில் நானும் என் அப்பாவும்” என்று ட்விட்டரில் தெரிவித்திருந்தார் மெக்கன்ஸி.

’20 பேர் மட்டுமே இருக்க வேண்டும்’: சீரியல் படபிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி

மைக்கேல் வெஸ்ட்மோர் உடனான கமல்ஹாசனின் தொடர்பு, இயக்குனர் ஷங்கரின் இந்தியன் (1996) படத்துக்கான ஒப்பனையில் இருந்து தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக தற்போது இந்தியன் 2 செயல்பாட்டில் உள்ளது. அதே ஆண்டில் அவ்வை சண்முகி திரைப்படம் வெளியானது. இதில் கமல் ஒரு பாட்டி வேடத்தில் நடித்தார். மேக்கப் காரணமான தொற்றால், கமல் அவதிப்பட்ட போது, வெஸ்ட்மோர் தான் அவருக்கு வழிகாட்டுதலை வழங்கினார். மைக்கேல் வெஸ்ட்மோர் 1985 ஆம் ஆண்டில் ’மாஸ்க்’ என்ற படத்துக்கு சிறந்த ஒப்பனைக்கான அகாடமி விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

"அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Kamal Haasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment