Advertisment

இளவயதில் மாரடைப்பு.. பிக் பாஸ் கமல்ஹாசன் அறிவுரை

தற்போது மக்கள் சந்திக்கும் முக்கிய பிரச்னை குறித்து நடிகர் கமல்ஹாசன் பேசியுள்ளார். அதாவது இன்றைய காலகட்டத்தில இளவயதில் கூட பலருக்கும் மாரடைப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன.

author-image
WebDesk
New Update
actor kamal hassan, tamilnadu politics, kamal hassan fans

நடிகர் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சியில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை நடத்திவருகிறார். இதன்மூலம் அவர் ஏராளமான நல்ல தகவல்களையும் பகிர்ந்துவருகிறார்.

கடந்த காலங்களில் இந்தப் பிக் பாஸ் ஷோ மூலமாக உலக தலைவர்கள் முதல் உள்ளூர் எழுத்தாளர்கள் வரை அவர்களின் சிறந்த படைப்புகளை ரசிகர்கள் முன்வைத்தார்.

Advertisment

இதன்மூலம் இந்தப் புத்தகங்களை அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுவருகிறது.

தற்போது மக்கள் சந்திக்கும் முக்கிய பிரச்னை குறித்து பேசியுள்ளார். அதாவது இன்றைய காலகட்டத்தில இளவயதில் கூட பலருக்கும் மாரடைப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன.

இது பற்றி கமல்ஹாசன் அவரது மருத்துவ நண்பரிடம் வினவியுள்ளார். அதற்கு மருத்துவர், “30-40 வயதினருக்கும் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது.

இதற்கு சரியான தூக்கமின்மை, உணவு பழக்க வழக்கம் மற்றும் செயலாற்றாமல் இருப்பது” எனப் பதிலளித்துள்ளார். இதனை அவர் பிக்பாஸில் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.  மூன்றாவது வார எலிமினேஷனுக்கு விசித்ரா, நிக்சன், மாயா, சரவணன், பிரதீப், பூர்ணிமா, மணி, வினுஷா, ஐஷு, விஜய் மற்றும் அக்ஷயா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர்.

பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் Vs ஸ்மால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் போட்டியில், போட்டியாளர்களான விஷ்ணுவும் விஜய்யும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Bigg Boss Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment