என்னுடைய பாபுவிடம் மன்னிப்பு கூறவே ‘ஹே ராம்’ படம் எடுத்தேன், மகாத்மா காந்தியின் கடுமையான விமர்சகனாக இருந்த நான் இன்று ரசிகனாக இருக்கிறேன் என்று நடிகரும் மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் கூறியுள்ளார்.
கமல்ஹாசனின் ‘ஹே ராம்’ திரைப்படம், மாற்று வரலாற்றைப் பின்பற்றி இந்தியாவின் பிரிவினையையும் நாதுராம் கோட்சேவால் மகாத்மா காந்தி படுக்கொலை செய்யப்பட்டதை சித்தரித்த படம்.
‘என்னுடைய பாபுவிடம் மன்னியுங்கள்’ என்று கூறும் விதமாக ‘ஹே ராம்’ திரைப்படத்தை உருவாக்கினேன். ‘நான் மகாத்மா காந்தியை கடுமையாக விமர்சித்தவன், இன்று அவருடைய ரசிகன்’ என்று ராகுல் காந்தியிடம் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன், தனது பதின் பருவத்தில் மகாத்மா காந்தியின் கடுமையான விமர்சகனாக இருந்ததற்காக, மகாத்மா காந்தியிடம் மன்னியுங்கள் என்று கூறும் விதமாக தான் எழுதி, இயக்கி, தயாரித்து நடித்த ‘ஹே ராம்’ பல தேசிய விருது பெற்ற திரைப்படம் என்று கூறினார்.
68 வயதான நடிகர் கமல்ஹாசன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் உரையாடிக்கொண்டிருந்தார். ராகுல் காந்தியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோவில், 2000-ம் ஆண்டில் தயாரித்த பீரியட் கிரைம் சினிமா தன்னை திருத்திக்கொள்வதற்காக உருவாக்கியதாக தெரிவித்துள்ளார்.
“நான் இப்போது காந்திஜியைப் பற்றி அதிகம் பேசுகிறேன், ஆனால், அது ஆரம்பத்தில் சரியாக இல்லை. என் தந்தை ஒரு காங்கிரஸ்காரர், ஆனால் நான் என் பதின்பருவத்தில் இருந்தபோது எனது சூழ்நிலை என்னை காந்திஜியை கடுமையாக விமர்சிக்க வைத்தது. என் தந்தை கூறினார், ‘வரலாற்றைப் படியுங்கள், நீங்கள் இன்றிலிருந்து பேசுகிறீர்கள். அவர் ஒரு வழக்கறிஞர், ஆனால், அவர் என்னிடம் இது குறித்து வாதிடவில்லை” என்று கமல்ஹாசன் கூறினார்.
கமல்ஹாசன் தனது 20-களின் நடுப்பகுதியில் காந்தியையும் அவருடைய கருத்துகளையும் நோக்கி எப்படி நகர்ந்தார் என்பதையும் இறுதியில் ‘ஹே ராம்’ படத்தை இயக்க முடிவு செய்ததையும் நினைவு கூர்ந்தார். ஒரு மாற்று வரலாற்றைப் பின்பற்றி உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் இந்தியாவின் பிரிவினையையும் நாதுராம் கோட்சேவால் மகாத்மா காந்தியைப் படுகொலை செய்யப்பட்டதையும் சித்தரிக்கிறது.
“எனக்கு 24-25 வயது இருந்தபோது, நான் காந்திஜியை சுயமாகக் கண்டுபிடித்தேன். சில ஆண்டுகளில் நான் மிகவும் வேகமாக நான் அவருடைய ரசிகனாக மாறிவிட்டேன். உண்மையில் உங்களைத் திருத்திக் கொள்ளவும், மன்னிப்பு கூறவும்தான் நான் காந்திஜியைக் கொல்ல விரும்பும் ஹே ராமை இணையான கொலையாளியாக ஆக்கினேன். அவர் அந்த நபருக்கு அருகில் செல்லும்போது – உண்மைக்கு அருகே செல்லும்போது – அவர் மாறுகிறார். ஆனால், அது மிகவும் தாமதமானது. அவர் செய்ய விரும்பியதை வேறொருவர் செய்கிறார். ஆனால், அவரது மனதை மாற்றிக்கொண்டார். அதுதான் படத்தின் கதை.” என்று கமல்ஹாசன் கூறினார்.
இந்த படத்தில் அந்த யோசனை உங்களுக்கு வந்ததா என்று ராகுல் காந்தி கேட்டதற்கு, ஆம் என்று பதிலளித்த கமல் ஹாசன், “என்னுடைய பாபுவிடம் மன்னிப்பு கேட்பது எனது வழி. உங்கள் குடும்பத்தில் நடந்தவை உட்பட குற்றங்களின் பொறுப்பை நான் ஏற்க வேண்டும். நாங்கள் அதை நடக்க விட்டுவிட்டோம்” என்று கூறினார்.
47வது தேசிய திரைப்பட விருதுகளில், ‘ஹே ராம்’ திரைப்படம் மூன்று விருதுகளைப் பெற்றது: அதுல் குல்கர்னிக்கு சிறந்த துணை நடிகர் விருதும், சரிகாவுக்கு ஆடை வடிவமைப்புக்கான விருதும், ஸ்பெஷல் எஃபெக்ஸ்-க்கான விருது மந்த்ராவுக்கும் கிடைத்தது. இந்த படம் பெரிய அளவில் பாராட்டையும் விமர்சனங்களையும் பெற்றது. இந்த படத்தை இந்தியா ஆஸ்கார் விருதுக்கு சமர்ப்பித்தது. ஆனால், ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்படவில்லை. இந்தப் படம் தமிழ் மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டது. இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்தார்.
கடந்த வாரம், புதுடெல்லியில் நடைபெற்ற காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்திரையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றார். செங்கோட்டையில் பேசிய கமல்ஹாசன், “ஏன் இங்கு வந்திருக்கிறேன் என்று பலர் என்னிடம் கேட்டனர். நான் ஒரு இந்தியனாக இங்கே இருக்கிறேன். எனது தந்தை காங்கிரஸ்காரர். நான் பல்வேறு சித்தாந்தங்களைக் கொண்டிருந்தேன். நான் ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கினேன். ஆனால், நாட்டைப் பொறுத்தவரை, அனைத்துக் கட்சிக் கோடுகளும் மங்கலாகி மறைய வேண்டும். நான் அந்த கோட்டை மங்கலாக்கி இங்கே வந்திருக்கிறேன்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”