Advertisment

பிக்பாஸ் 3, விளம்பர படம்: மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் கமல்!

ஒரு விளம்பரப் படத்தில் நடிக்க இருக்கிறாராம் கமல்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kamal haasan bigg boss 3, bigg boss tamil

சினிமாவில் புதுமைகளை புகுத்தி வித்தியாச முயற்சிகளை கையாள்பவர் நடிகர் கமல் ஹாசன்.

Advertisment

இவர் கடந்த 2017-ம் ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையிலும் அறிமுகமானார். தொடர்ந்து மூன்றாவது முறையாக ’பிக்பாஸ் 3’யை அவரே தொகுத்து வழங்க இருக்கிறார்.

இந்நிகழ்ச்சி வரும் 23-ம் தேதி இரவு 8 மணி முதல் ஒளிபரப்பாகும் என சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

இந்நிலையில் வரும் வாரத்தில் ஒரு விளம்பரப் படத்தில் நடிக்க இருக்கிறாராம் கமல். அது ஒரு ‘டாய்லெட் கிளீனர்’ விளம்பரம் என்று தெரிவிக்கிறது நெருங்கிய வட்டாரம். மற்ற விளம்பரம் போல் இல்லாமல் தூய்மையின் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில் இன்னொவேட்டிவாக அந்த விளம்பரம் படமாக்கப்பட இருக்கிறதாம்.

இவர் ஏற்கனவே போத்தீஸ் துணிக்கடை விளம்பரம், தனது மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் விளம்பரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே கமல் ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் உருவாகவிருந்த ‘இந்தியன் 2’ படம் உருவாகுமா இல்லை நின்று விடுமா என்ற பதட்டத்தில் இருக்கிறார்கள் கமல் ரசிகர்கள்!

Kamal Haasan Bigg Boss Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment