பாரதிராஜா சொன்ன வாக்கை காப்பாற்றிய தேனிக்கார நண்பர் என வாழ்த்தியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
அண்மையில் இயக்குனர் பாரதிராஜா உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.
அவருக்கு வித்தியாசமான வாழ்த்து ஒன்றை அனுப்பியுள்ளார் உலக நாயகன் கமல்ஹாசன்.
-
இயக்குனர் பாரதிராஜா
இது குறித்து ட்விட்டரில் அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “உங்களை மருத்துவமனையில் இப்படி பார்க்க பிடிக்கவில்லை. சீக்கிரம் வீடு திரும்புங்கள் என்று சொன்னேன்.
அதற்கு பாரதிராஜா, Ok see you later for sure, Bye என ஆங்கிலத்தில் கூறினார். தற்போது சொன்ன வாக்கை காப்பாற்றியுள்ளார் இந்த தேனிக்காரர்.
அவருக்கு பரமகுடியானின் வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார். கமல்ஹாசனின் இந்த ட்வீட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“