கேரளா அமைச்சரை புகழ்ந்த கமல்: சமூக வலைதள ரியாக்ஷன்

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கேரள அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளையும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா டீச்சர் தீவிர நடவடிக்கையையும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் புகழ்ந்து பேசியது குறித்து நெட்டிசன்கள் பலவாறாக கம்மெண்ட் செய்து வருகின்றனர்.

By: June 1, 2020, 8:04:47 PM

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கேரள அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளையும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா டீச்சர் தீவிர நடவடிக்கையையும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் புகழ்ந்து பேசியது குறித்து நெட்டிசன்கள் பலவாறாக கம்மெண்ட் செய்து வருகின்றனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிந்தைய உலகின் புதிய யதார்த்தம் என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்  தலைவர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் டாக்டர் ரமணன் லஷ்மி நாராயணன், மனநல மருத்துவர் டாக்டர் ஷாலினி மற்றும் கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா டீச்சர் ஆகியோருடன் கொரோனா வைரஸ் தொற்று நோய் எப்படி எதிர்கொள்ளப்பட்டது என்பது குறித்து காணொலி காட்சி மூலம் உரையாடினார்.

இந்த உரையாடலில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கேரள அரசு மேற்கொண்ட நடவடிக்கையையும் அதில் அமைச்சர் சைலஜா டீச்சரின் செயல்பாட்டையும் வெகுவாக புகழ்ந்து பாராட்டினார்.


கமல்ஹாசன் அமைச்சர் சைலஜா டீச்சர் உடனான  உரையாடலின் போது, உங்களுடைய பணியை ஒட்டுமொத்த நாடும் பாராட்டுகிறது. நீங்கள் செய்தது மிகப் பெரிய பணி. கொரோனாவை எப்படி நீங்கள் கையாண்டீர்கள் என்பதை எங்களுக்கும் கூறுங்கள். கொரோனாவை உங்கள் துறையும் கேரள அரசும் எவ்வாறு எதிர்கொண்டீர்கள்?   என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் சைலஜா டீச்சர்: கேரளாவில் உள்ள சூழல் நாட்டின் மற்ற மாநிலங்கள், உலக நாடுகளில் பிற பகுதிகளில் இருந்தும் வேறுபட்டது. 1957-ம் ஆண்டு முதல் உள்ளாட்சி அமைப்புகள் வலுப்படுத்தினோம். அது பல்வேறு தருணங்களில் நல்ல ரிசல்ட்டுகளை கொடுத்தது. எங்களுடைய மனிதவள மேம்பாடும் மிகவும் அதிகமானது. நாங்கள் நிதி ரீடியாக பெரிய மாநிலம் அல்ல. என்றாலும், எங்களுக்கும் நிதி பற்றாக்குறையும் இருந்தது. இருப்பினும் மக்கள் அதிகாரப் பரவலாக்கத்தால் நாங்கள் சமாளிக்க முடிந்தது. எங்களுக்கு மிகவும் நல்ல மனிதவள மேம்பாட்டு உள்ளடக்கம் உள்ளது. எங்களுக்கு மிகவும் நல்ல பொது சுகாதார கட்டமைப்பு உள்ளது. இந்த தொற்று நோயை எதிர்கொள்வதற்கான எங்களுடைய  சுகாதாரத்துறையின் தயார் நிலை மற்றும் அரசின் கூட்டு முயற்சி ஆகியவையே காரணம் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், டிரேசிங் முறையில் கொரோனாவை கண்டறிதல் விஷயத்தை எப்படி செய்தீர்கள், இது மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது, நாங்கள் இதை உங்களிடம் இருந்து கற்க வேண்டும் கேட்டார்.

இதற்கு பதில் அளித்த சைலஜா டீச்சர், “தமிழகமும் கொரோனாவைக் கண்டறியும் விஷயத்தில் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறது. கொரோனா ஒரு தொற்றுநோய் என அறிவிப்பதற்கு முன்பே நாங்கள் முழுவதும் படித்து தெரிந்து கொண்டோம். உடனே இதுகுறித்து ராஜன் என்ற ஐஏஎஸ் அதிகாரியிடம் ஆலோசனை நடத்தினேன். அப்போது ராஜன் கூறுகையில் வுகானில் கேரளாவை சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி படித்து வருகிறார்கள். அவர்களை நாம் மீட்க வேண்டும் என கூறினார். அதன்படி அவர்களை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.” என்று கேரள அரசின் நடவடிக்கைகளை விரிவாகக் கூறினார்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கேரள அரசு எடுத்த நடவடிக்கைகள் மற்றும் அமைச்சர் சைலஜா டீச்சரின் நடவடிக்கைகளை கமல்ஹாசன் இந்த காணொலி  காட்சி உரையாடலி வெகுவாகப் புகழ்ந்து பேசினார்.

இதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மற்றும் கமல்ஹாசன் ஆதரவாளர்கள், நெட்டிசன்கள் இடையே விவாதங்கள் ஏற்பட்டுள்ளன.


ஒரு டுவிட்டர் பயணர், கமல்ஹாசன் ஆன்லைன் பயிற்சி மையம் நடத்திய ஆங்கிலம் பேசுதல் யூடியூப் நேரலை வகுப்பு தயவு செய்து ஷேர் பண்ணுங்கள் சப்ஸ்கிரைப் பண்ணுங்கள் என்று விமர்சித்து பதிவிட்டுள்ளார்.


கமல்ஹாசனை பாராட்டும் விதமாக ஒரு டுவிட்டர் பயணர், “தமிழக அமைச்சர்கள் இதை செய்திருக்க வேண்டும். இது ஆசிரியருடனான கலந்துரையாடல் ஆனால், அவர்கள் உங்களைப் போல இல்ல சார். அவர்கள் ஈகோ காரணமாக அதை செய்யமாட்டார்கள். கேரள முதல்வரும் கேரள மக்களும் எப்போதும் தமிழர்களை அவர்களுடைய சகோதரர்களாகவே பார்க்கிறார்கள். ஈகோ இல்லாமல் கொண்டதால் இன்று கேரளா ஒரு குழுவை மகாராஷ்டிராவுக்கு அனுப்பியுள்ளது. தமிழகத்திற்கு உங்களப்போல ஒரு முதல்வர் தேவை சார்” என்று பதிவிட்டுள்ளார்.

கமல்ஹாசன் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா டீச்சர் உடனான உரையாடல் குறித்தும் அவர் அமைச்சரை புகழ்ந்து பேசியது குறித்தும் நெட்டிசன்கள் பலவாறாக கம்மெண்ட் செய்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Kamal haasan conversation with kerala minister shailaja teacher netizens reactions

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X