Advertisment

உலக நாயகன் கமல்ஹாசன் கலைப் பயணத்தின் வைரவிழா; 3 நாள் கொண்டாட்டம்

சினிமா உலகில் நடிகர் கமல்ஹாசனின் 60 ஆண்டுகால வைரவிழா கலைப்பயணத்தை 3 நாட்கள் தொடர்ந்துகொண்டாட உள்ளதாக ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷ்னல் நிறுவனம் அறிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kamal haasan diamond jubilee, actor kamal haasan, kamal haasan cinema carrier diamond jubilee, கமல்ஹாசன், கமல்ஹாசன் கலைப்பயணம் வைரவிழா, balachander, tamil cinema, maestro ilayaraja music, rajkamal film international

kamal haasan diamond jubilee, actor kamal haasan, kamal haasan cinema carrier diamond jubilee, கமல்ஹாசன், கமல்ஹாசன் கலைப்பயணம் வைரவிழா, balachander, tamil cinema, maestro ilayaraja music, rajkamal film international

சினிமா உலகில் நடிகர் கமல்ஹாசனின் 60 ஆண்டுகால வைரவிழா கலைப்பயணத்தை 3 நாட்கள் தொடர்ந்துகொண்டாட உள்ளதாக ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷ்னல் நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertisment

தமிழ் சினிமா உலகிலும் இந்திய சினிமா உலகிலும் நடிகர் கமல்ஹாசனின் பங்களிப்பு மிக முக்கியமானது. நடிகர் கமல்ஹாசன் களத்தூர் கண்ணாம்மாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி உலகநாயகனாக வளர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கி அரசியலிலும் நுழைந்து செயல்பட்டுவருகிறார்.

நடிகர் கமல்ஹாசன் சினிமாவிற்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. தமிழ் சினிமாவுக்கும் இந்திய சினிமாவுக்கும் அவருடைய பங்களிப்பு மிக முக்கியமானது.

கமல்ஹாசனின் சினிமாவிற்கு அளித்த பங்களிப்புக்காக அவருடைய 60 ஆண்டு கலை பயணத்தை கொண்டாடும் விதமாக வருகிற நவம்பர் 7, 8, 9 தேதிகளில் ஒரு தொடர் கொண்டாட்டத்தை கமல்ஹாசனின் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் அறிவித்துள்ளது.

நவம்பர் 7 ஆம் தேதி கமல்ஹாசன் பிறந்த தினம். அதோடு அன்றுதான் அவருடைய தந்தையாரும், சுதந்திர போராட்ட வீரரும், வழக்கறிஞருமான டி.சீனிவாசனின் நினைவு தினம் என்பதால் அன்றைய தினம் கமல்ஹாசன் அவருடைய தந்தையின் சிலையை சொந்த ஊரான பரமக்குடியில் தனது குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் காலை 10.30 மணிக்கு திறந்து வைக்க உள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே.சாலையில் உள்ள ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் நவம்பர் 8 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு கமல்ஹாசன் தனது கலை உலக குருவான பாலச்சந்தரின் சிலையை திறக்க உள்ளார். இதில் பாலச்சந்தரின் குடும்பத்தினரும், திரையுலகை சார்ந்த முக்கிய பிரமுகர்களும் கலந்துகொள்கிறார்கள்.

மேலும் அன்றைய தினம் கமல்ஹாசனின் இயக்கத்தில் வெளியான ‘ஹே ராம்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சி சென்னை சத்யம் தியேட்டரில் மதியம் 3.30 மணிக்கு திரையிடப்பட உள்ளது. அப்போது திரையுலக பிரமுகர்கள் மற்றும் ஊடகத்தினருடன் அந்த திரைப்படம் குறித்து கமல்ஹாசன் கலந்துரையாட உள்ளார்.

இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து, அடுத்த நாள் 9 ஆம் தேதி கமல்ஹாசனின் 60 ஆண்டுகால கலை பயணத்தை கொண்டாடும் வகையில், இசைஞானி இளையராஜாவின் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போது கமல்ஹாசனுடன் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு திரையுலக முக்கிய பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர். இந்த இசை விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளது.

இதனால், கமல்ஹாசன் ரசிகர்கள் மட்டுமில்லாமல் ரஜினி ரசிகர்களும் இந்த நிகழ்ச்சியைக் காணும் ஆவலில் உள்ளனர்.

Kamal Haasan Mnm
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment