Advertisment

‘இழந்த நேரத்தை ஈடுசெய்ய முடியாது...’ இந்தியன் 2-க்கு அடுத்து இந்தியன் 3 - அப்டேட் கொடுத்த கமல்ஹாசன்

இழந்த நேரத்தை என்னால் ஈடுசெய்ய முடியாது என்று கூறியுள்ள நடிகர் கமல்ஹாசன், இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்களின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
kamal haasan 1

நடிகர் கமல்ஹாசன், இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்களின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். (Photo: X/@ikamalhaasan)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 2022-ம் ஆண்டு வெளியான விக்ரம் படத்தை அடுத்து, இந்தியன் 2, இந்தியன் 3 மற்றும் தக் லைஃப் ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Kamal Haasan gives an update on Indian 2 and Indian 3: ‘I can’t make up for the lost time…’

நடிகர் கமல்ஹாசன் அரசியலில் ஈடுபட்டுவரும் அதே நேரத்தில் சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார். கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருவதாகவும் இந்தியன் 3 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தி இந்துவுக்கு அளித்த பேட்டியில், “இழந்த நேரத்தை என்னால் ஈடுசெய்ய முடியாது. மேலும், உற்பத்தியை விரைவுபடுத்த முடியாது, ஏனெனில் அளவு ஒரு பொருட்டல்ல, தரம் முக்கியமானது. இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 ஆகிய படங்களை முடித்துள்ளோம். இந்தியன் 2 படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்த பிறகு, இந்தியன் 3 படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளைத் தொடங்குவோம்” என்று தெரிவித்துள்ளார்.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில்,  ‘தக் லைஃப்’ படத்தில் நடிக்க கமல்ஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படம் பற்றி கமல்ஹாசன் பேசுகையில், “மணிரத்னத்தின்  ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு தேர்தல் பிரச்சாரம் முடிந்தவுடன் விரைவில் தொடங்கும். மேலும், கல்கி 2898 கி.பி என்ற படத்தில் கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளதாகத் தெரிவித்தார்.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில், 1996-ம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளார். இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், நெடுமுடி வேணு, விவேக், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kamal Haasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment