Advertisment

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய கமல் : என்ன நடந்தது ?

நடிகர் கமல்ஹாசன் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பி உள்ளார்.

author-image
WebDesk
New Update
Tamil news

Tamil news updates

நடிகர் கமல்ஹாசன் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பி உள்ளார்.

Advertisment

நடிகர் கமல்ஹாசன் தற்போது பிக்பாஸ் சீசன் 6 தொகுத்து வழங்குகிறார். ஒரு புறம் பிக்பாஸ் நிகழ்ச்சி, மறுபுறம் சினிமா மற்றும் அரசியல் என்று பல்வேறு பணிகளை செய்துவருகிறார்.

இந்நிலையில் அவர் முன்னணி இயக்குநர் கே.விஸ்வாநாதனின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டார். இந்த நிகழ்வு முடிந்து சென்னை திரும்பியபோது அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் கமல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், காய்ச்சல் காரணமாக கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், தற்போது அவர் நலமாக உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்துவருகிறார். மேலும் இவர் உதயநிதி ஸ்டாலினை வைத்து படம் தயாரிக்க உள்ளார்.  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment