Advertisment
Presenting Partner
Desktop GIF

4 பிரம்மாண்ட படங்கள்; உச்சபட்ச சம்பளம்… விஜய்- அஜித்தை முந்துகிறாரா கமல்ஹாசன்?

நடிகர் கமல்ஹாசன் கைவசம் 4 பிரம்மாண்ட படங்கள் உள்ள நிலையில், அவருடைய உச்ச சம்பளத்தால், முன்னணி நடிகர்கள் விஜய் - அஜித்தை முந்துகிறாரா கமல்ஹாசன்? என்ற பேச்சு கோலிவுட்டில் எழுந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kamal Haasan have 4 mega budget movie, Kamal Haasan overtakes Vijay and Ajith, கமல்ஹாசன் கைவசம் 4 பிரம்மாண்ட படங்கள், கமல்ஹாசன் உச்சபட்ச சம்பளம்., விஜய்- அஜித்தை முந்துகிறாரா கமல்ஹாசன், Kamal Haasan, 4 mega budget movie, kamal haasan, Vijay, Ajith, Kamal haasan Indian 2, KH 233, Project K, Manirathnam

4 பிரம்மாண்ட படங்கள்; உச்சபட்ச சம்பளம்... விஜய்- அஜித்தை முந்துகிறாரா கமல்ஹாசன்?

நடிகர் கமல்ஹாசன் கைவசம் 4 பிரம்மாண்ட படங்கள் உள்ள நிலையில், அந்த படங்களுக்கு அவர் வாங்கியுள்ள உச்ச சம்பளத்தால், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் - அஜித்தை கமல்ஹாசன் முந்துகிறாரா? என்ற பேச்சு கோலிவுட்டில் எழுந்துள்ளது.

Advertisment

கமல்ஹாச நடித்த விஸ்வ ரூபம் படத்திற்குப் பிறகு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்த விக்ரம் படம் அவரே எதிர் பாராத அளவுக்கு மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் ரூ.450 கோடிக்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸிலும் சக்கைப்போடு போட்டது.

விக்ரம் படத்திற்கு பின், கமல்ஹாசனின் மார்க்கெட் திடீரென வானத்தை தொட்டது. தற்போது கமல்ஹாசன் கைவசம் இந்தியன் 2, புராஜெக்ட் கே, கே.ஹெச் 233, மணிரத்னத்துடன் 1 படம் என்று 4 பிரம்மாண்ட படங்களை வைத்துள்ளார்.

கமல்ஹாசன் விக்ரம் படத்திற்கு முன்னரே கமிட் ஆன திரைப்படம் தான் இந்தியன் 2. இப்படம் ஆரம்பிக்கப்பட்டு சுமார் 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில், தற்போது ஒரு வழியாக படப்பிடிப்பு முடிவுக்கு வர உள்ளது.

ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 பிரம்மாண்ட திரைப்படம் வருகிற 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் நடிப்பதற்காக கமல்ஹாசன் ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி உள்ளார்.

கமல்ஹாசன் அண்மையில் கமிட் ஆன திரைப்படம் தான் பிரபாஸ் நாயகனாக நடிக்கும் புராஜெக்ட் கே. இந்த படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார். இப்படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தில் நடிக்க 25 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்துள்ள நடிகர் கமல்ஹாசனுக்கு ரூ.130 கோடி சம்பளம் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கமல்ஹாசன் கைவசம் உள்ள மற்றுமொரு திரைப்படம் இயக்குனர் ஹெச். வினோத் இயக்கும் கே.ஹெச் 233. இந்த படத்திற்கான அறிவிப்பு செவ்வாய்க்கிழமை வெளியானது. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

கமல்ஹாசன் நடிகும் கே.ஹெச். 233 படம் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னரே, ரூ.125 கோடி வரை பிசினஸ் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படம் முடித்ததும் கமல்ஹாசன் மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார். இத பிரம்மாண்ட படத்திற்கான திரைக்கதை பணிகலிஅ இயக்குனர் மணிரத்னம் மேற்கொண்டு வருகிறார். இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்துடன் இணைந்து கமல்ஹான் மற்றும் மணிரத்னம் தயாரிக்க உள்ளனர்.

கமல்ஹாசன் 4 பிரம்மாண்ட படங்களை வைத்துள்ளார். இந்த 5 படங்களும் வெளியானால், தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகர் என்ற இடத்தை கமல்ஹாசன் பிடித்துவிடுவார் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது.

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித் கைவசம் ஒரு படத்தை மட்டுமே வைத்துக்கொண்டு நடித்து வரும் நிலையில், உலக நாயகன் கமல்ஹாசன் கைவசம் 4 பிரம்மாண்ட படங்களை வைத்துக்கொண்டு அதிரடியாக நடித்து வருகிறார். இதன் மூலம், கமல்ஹாசன் முன்னணி நடிகர்களான விஜய், அஜித்தை முந்துகிறார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Ajith Vijay Kamal Haasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment