தனது நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் திரைப்படமான 'தக் லைஃப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், "தமிழ் மொழியில் இருந்து பிறந்தது கன்னடம்" என்று கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இக்கருத்துக்கு கன்னட சார்பு அமைப்புகளிடமிருந்து கடும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன.
இந்நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், தனது உரையை "உயிரே உறவே தமிழே" என்று தொடங்கினார். பின்னர், "நடிகர் சிவராஜ்குமார் வேறொரு மாநிலத்தில் வாழும் என் குடும்பம். அதனால்தான் அவர் இங்கு இருக்கிறார். இதன் காரணமாக நான் எனது உரையை இவ்வாறு தொடங்கினேன். உங்கள் மொழி (கன்னடம்) தமிழிலிருந்து பிறந்தது. அதனால் நீங்களும் அந்த வரிசையில் சேர்க்கப்படுகிறீர்கள்" என்று தெரிவித்தார்.
மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் சகோதரரும், கன்னட நடிகருமான சிவராஜ்குமார், மணி ரத்னம் இயக்கும் இந்த படத்தின் நிகழ்வில் கடந்த சனிக்கிழமை கலந்து கொண்டார்.
கமல்ஹாசனின் இந்தக் கருத்து கர்நாடகாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னட ரக்ஷண வேதிகா போன்ற கன்னட சார்பு அமைப்புகள் இந்தக் கருத்துகளை கண்டித்ததுடன், கமல்ஹாசன் இதுபோன்ற கருத்துகளை தொடர்ந்து தெரிவித்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளன.
பெங்களூருவில் 'தக் லைஃப்' திரைப்படத்தின் பதாகைகளை கன்னட சார்பு ஆர்வலர்கள் கிழித்ததுடன், கமல்ஹாசனுக்கு அவரது கருத்துக்களுக்காக எச்சரிக்கை விடுத்தனர்.
கன்னட ரக்ஷண வேதிகாவின் தலைவர் பிரவீன் ஷெட்டி கூறுகையில், "கமல்ஹாசன் தமிழ்தான் கன்னடத்தை விடச் சிறந்தது என்றும், தமிழ் பிறந்த பின்னர்தான் கன்னடம் பிறந்தது என்றும் கூறினார். கமல்ஹாசனுக்கு நாங்கள் எச்சரிக்கை விடுக்கிறோம். உங்களுக்கு கர்நாடகாவில் வணிகம் தேவை. ஆனாலும் கன்னடத்தை அவமதிக்கிறீர்கள்" என்றார்.
மேலும் அவர், "இன்று நீங்கள் இந்த மாநிலத்தில் இருந்தீர்கள், உங்களுக்கு கறுப்பு மை பூச நாங்கள் தயாராக இருந்தோம், நீங்கள் சென்று விட்டீர்கள். கர்நாடகாவிற்கும், இந்த மாநில மக்களுக்கும் எதிராக பேசினால், உங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறும் என்று நாங்கள் எச்சரிக்கிறோம். உங்கள் திரைப்படம் கர்நாடகாவில் தடை செய்யப்படும் என்று நாங்கள் எச்சரிக்கிறோம்" என்று கூறினார்.
கமல்ஹாசன் தனது பட விளம்பரத்திற்காக பெங்களூருவில் ஒரு நிகழ்ச்சிக்கு வரவிருப்பதாகக் கூறப்பட்ட இடத்தில், கன்னட சார்பு குழுக்களின் ஆர்வலர்கள் கூடினர். அவர் மீது கறுப்பு மை வீசி எதிர்ப்பு தெரிவிக்க போராட்டக்காரர்கள் திட்டமிட்டனர். பின்னர், கமல்ஹாசன் தங்கள் திட்டங்களை அறிந்ததும் அங்கிருந்து புறப்பட்டுவிட்டதாக போராட்டக்காரர்கள் கூறினர்.
பா.ஜ.க கர்நாடக மாநிலத் தலைவர் பி.ஒய். விஜயேந்திரா, நடிகர் கமல்ஹாசனின் கன்னட மொழி குறித்த கருத்துகளை "நாகரிகமற்ற நடத்தை" மற்றும் "திமிரின் உச்சம்" என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் விமர்சித்தார். கலைஞர்கள் அனைத்து மொழிகளையும் மதிக்க வேண்டும் என்றும், சிவராஜ்குமார் முன்னிலையில் தமிழைப் புகழ்ந்து கன்னடத்தை அவமதித்ததாக கமல்ஹாசன் மீது குற்றம் சாட்டினார்.
கன்னட மொழி 2,500 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தைக் கொண்டிருப்பதாகவும், இதுபோன்ற கருத்துகளால் அது குறைத்து மதிப்பிடப்படக்கூடாது என்றும் விஜயேந்திரா கூறினார். கன்னடப் படங்களில் நடித்த கமல்ஹாசன், அந்த மொழி மற்றும் அதன் மக்களிடம் "நன்றியற்ற முறையில்" நடந்து கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கமல்ஹாசன் தொடர்ந்து இந்து மதத்தை அவமதித்து, மத உணர்வுகளை புண்படுத்தி வருகிறார் என்றும், இப்போது 6.5 கோடி கன்னடர்களை புண்படுத்தியுள்ளார் என்றும் அவர் குற்றம் சாட்டினார். கமல்ஹாசன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என விஜயேந்திரா கூறினார்.
கமல்ஹாசன் ஒரு விளக்கம் அல்லது மன்னிப்பு வெளியிடவில்லை என்றால், கர்நாடகாவில் அவரது படங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று கூறப்படும் நிலையில், இந்த சர்ச்சை மொழி பெருமைக்கும், பிராந்திய உணர்வுகளுக்கும் இடையே ஒரு புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
'தமிழ் மொழியில் இருந்து பிறந்தது கன்னடம்'; கமல்ஹாசன் பேச்சுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு - படத்தை வெளியிட முடியாது என எச்சரிக்கை
நடிகர் கமல்ஹாசன் அண்மையில் சென்னையில் நடைபெற்ற 'தக் லைஃப்' திரைப்பட விழாவில், "தமிழ் மொழியில் இருந்து பிறந்தது கன்னடம்" என்று கூறிய கருத்து, கர்நாடகாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.