/tamil-ie/media/media_files/uploads/2021/08/Sarpatta-Kamal-haasan-4.jpg)
தமிழ் சினிமா உலகில் எந்த நல்லப் படம் வந்தாலும் உடனடியாக அந்தன் படத்தின் இயக்குனர், நடிகர்கள் மற்றும் படக் குழுவினரை அழைத்து பாராட்டிவிடும் உலநாயகன் கமல்ஹாசன், அண்மையில் பெரும் வரவேற்பை பெற்ற சார்பட்டா பரம்பரை படக்குழுவினரை அழைத்து பாராட்டியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் பல முதல் முயற்சிகளை செய்து வெற்றி பெற்றவர். உலகநாயகன் என்று சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கி அரசியலிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அதே நேரத்தில் தமிழ் சினிமாவில் நல்ல படங்கள் வரும்போது அவர்களைப் பாராட்ட தவறியதே இல்லை.
அந்த வகையில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்த சார்ப்பட்டா பரம்பரை படம் எடுக்கப்பட்டது. 1975ல் எமர்ஜென்ஸி காலகட்டத்தில் சென்னையில் குத்துச்சண்டை வாத்தியார் பரம்பரைகளுக்கு இடையே நடந்த குத்துச்சண்டையை மையமாக வைத்து சார்பட்டா பரம்பரை படத்தை இயக்கினார். இந்த படம் திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனா பொதுமுடக்கம் காரணமாக திரையரங்குகளில் வெளியிட முடியாமல் போனது. அதனால், சார்பட்டா பரம்பரை ஜூலை 22ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தைப் பற்றி பாராட்டதவர்களே இல்லை என்கிற அளவுக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன. விமர்சிப்பது என்றாலும் விமரித்தே ஆக வேண்டும் என்ற அளவுக்கு படம் அமைந்துள்ளது.
சார்பட்டா பரம்பரை படத்தில் நடிகர் ஆர்யாவுடன் நடிகை துஷாரா விஜயன், அனுபம், பசுபதி, ஜான் விஜய், ஜான் கொக்கேன், கலையரசன், ஷபீர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். பா.ரஞ்சித் உடன் இணைந்து எழுத்தாளர் தமிழ்பிரபா திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தால் மிகப் பெரிய வசூலைக் குவித்திருக்கும் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.
சார்பட்டா படக்குழுவினரை பாராட்டிய கமல் ஹாசன் அவர்கள் இதழாசிரியர் பா. இரஞ்சித் அவர்களிடமிருந்து இதழை பெற்றுக் கொண்ட போது. pic.twitter.com/ueAH2KIaR1
— Neelam Publications (@NeelamPublicat1) August 6, 2021
இந்த நிலையில், உலகநாயகன் கமல்ஹாசன் சார்பட்டா பரம்பரை படக்குழுவினரை அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளர். சார்பட்டா பரம்பரை படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித், நடிகர்கள் ஆர்யா, கலையரசன், துஷாரா விஜயன், ஷபீர், பசுபதி, சாண்டி, ஜான் விஜய், எழுத்தாளர் தமிழ்பிரபா ஆகியோரை அழைத்து பாராட்டியுள்ளார். கமல்ஹாசன் சார்ப்பட்டா படக்குழுவினருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளார். இயக்குனர் பா.ரஞ்சித் கமல்ஹாசனை சந்தித்தபோது அவருடைய நீலம் பதிப்பகம் வெளியிடும் நீலம் இதழை அளித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் சார்பட்டா பரம்பரை படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
Can’t thank @ikamalhaasan sir enough for all the love he has been showering right from the beginning of the project till today 😍😍🤗🤗 Thank you for meeting us and sharing ur thoughts 🤗😍😍 Love you so much sir 🤗😘 #Mahendran sir sorry we troubled you too much 🤗🤗 pic.twitter.com/6vfU2Gdid6
— Arya (@arya_offl) August 6, 2021
சார்பட்டா பரம்பரை படக்குழுவினர் கமல்ஹாசனை சந்தித்த புகைப்படத்தை நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “கமல்ஹாசன் சார் இந்த படம் தொடங்கியதில் இருந்து இன்றுவரை அன்பை பொழிந்து கொண்டிருக்கும் எல்லா அன்புக்கும் நன்றி சொல்ல முடியாது. எங்களை சந்தித்து உங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி. லவ் யு சோ மச் சார். மகேந்திரன் சார் மன்னிக்கவும். உங்களை நாங்கள் ரொம்ப தொந்தரவு செய்துவிட்டோம்.” என்று தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.