New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/01/pooja-kumar-her-husband.jpg)
குழந்தை அம்மா பூஜா குமார் மாதிரியே அழகாக இருக்கிறாள் என்று ரசிகர்கள் கம்மெண்ட் செய்து வருகின்றனர்.
கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தில் ஹீரோயினாக நடித்த பூஜா குமாருக்கு குழந்தை பிறந்துள்ளதால் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குழந்தை அம்மா பூஜா குமார் மாதிரியே அழகாக இருக்கிறார் என்று ரசிகர்கள் கம்மெண்ட் செய்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பொதுமுடக்க காலத்தில் பிரபலங்கள் பலரும் குழந்தை பெற்றுகொண்டனர். அந்தவரிசையில் இன்னொரு பிரபல நடிகை பூஜா குமாருக்கு குழந்தை பிறந்துள்ளதை இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
நடிகை பூஜா குமார் தமிழ் சினிமாவில் 1999ம் ஆண்டு காதல் ரோஜாவே திரைப்படத்தின் மூலம் அறிமுகமனார். பிறகு அவர் ஒரு நீண்ட இடவெளிக்குப் பிறகு கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து மீண்டும் தமிழ் சினிமா உலகில் மறு வருகை செய்தார். அதன் பிறகு, உத்தம வில்லன், மீன் குழம்பும் மண் பானையும் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அதே போல, அவர் சில தெலுங்கு மற்றும் இந்தி சினிமாக்களிலும் நடித்தார்.
பூஜா குமார் அவரது கணவர் விஷால் ஜோஷி இருவரும் தங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை தெரிவித்துள்ளார்கள். அந்த குழந்தைக்கு நாவ்யா என்று பெயரிட்டுள்ளதையும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பூஜா குமாரின் கணவர் விஷால் ஜோஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிடுகையில், “ஒருகாலத்தில் நாம் இருவராக இருந்தோம். இப்போது மூவராகியுள்ளோம். பூஜாவும் நானும் எங்களுடைய குட்டிப் பெண் நாவ்யா ஜோஷியை உங்களுக்கு எல்லாம் அறிமுகப்படுத்துவதில் நாங்கள் ரொம்ப சந்தோஷமாக உள்ளோம்.
பூஜா குமார் நான் கனவு கண்டபடி சிறந்த வாழ்க்கை துணையாக இருப்பதற்கும் நம்முடைய குட்டிப் பெண் நாவ்யாவை இந்த உலகத்திற்கு கொண்டு வந்ததற்கும் நன்றி. இந்த பிறந்தநாளை எனது சிறந்த பிறந்தநாளாக மாற்றியுள்ளீர்கள். உங்கள் இருவரையும் மிகவும் நேசிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.