நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் பற்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் விரைவில் திரைக்கு வரவிருக்கும் விஸ்வரூபம் 2 படத்தின் புரோமோஷன் பணிக்காக மும்பை, கேரளாவிற்கு படக்குழுவுடன் சென்றிருந்தார். முதலில் மும்பையில் சல்மான்கான் நடத்தி வரும் தஸ்காதம் என்ற ரியாலிட்டி ஷோவிற்கு சென்றிருந்தார். அவருடன் நடிகை பூஜா குமாரும் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கமல்ஹாசன், மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாரும், நண்பருமான மோகன்லால் குறித்து பல தகவல்களை பகிர்ந்துள்ளார். மலையாள நடிகர் சங்கமான அம்மாவில் நடிகர் திலீப் இணைந்தது மலையாள சினிமாவையே புயல் அடித்தது போல் மாற்றிவிட்டது.
பிரபல மலையாள நடிகை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். அவரின் மீது போலீஸ் வழக்கு பதிவு ஆனதால் அம்மாவில் இருந்தும் அவரை சங்கத்தலைவர்கள் நீக்கினர். இந்நிலையில் தான் அம்மாவின் புதிய தலைவராக நடிகர் மோகன்லால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.மோகன்லால் தலைவராக பொறுப்பேற்ற பிறகு நடிகர் திலீப் மீண்டும் சங்கத்தில் இணைக்கப்பட்டது பெரும் சலசலைப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான நடிகை மற்றும் ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கள், கீத்து மோகன்தாஸ் உள்ளிட்ட நடிகைகள் அம்மா சங்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினர். தற்போது வரை முடிவுக்கு வராத இந்த பிரச்சனை பற்றி சில நாட்களுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்திருந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2018/07/1-46.jpg)
நடிகர் திலீப் சங்கத்தில் இணைக்கப்பட்டது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்றும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகைகள் பக்கம் தான் நானும் என்றும் சூசனமாக கூறியிருந்தார். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனிடன் மோகன்லால் குறித்து கேள்வி எழுப்பபட்டது. இதற்கு பதில் அளித்த அவர், “மோகன்லால் என்னுடைய உற்ற நண்பர். கிட்டத்தட்ட நாங்கள் இருவரும் பக்கத்து வீட்டுகாரர்கள் போல். அவர் என் நண்பர் என்பதற்காக அவரை பற்றி நல்ல விஷயங்களை மட்டும் நான் சொல்லவேண்டும் என்று அவசியமில்லை. என்னுடைய கருத்துக்கும் அவருடைய கருத்துக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.
/tamil-ie/media/media_files/uploads/2018/07/1-47-1024x515.jpg)
நாளையே அவருக்கு என் அரசியல் குறித்து முரண்பாடனா கருத்துக்கள் தோன்றலாம். அதற்காக நான் அவரை பற்றி தவறாக பேசிவிட முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
மலையாள சினிமாவுடன் நடிகர் கமல்ஹாசனுக்கு எப்போதுமே நெருங்கிய உறவு உண்டு. தமிழில் வெளியான உன்னை போல் ஒருவன் திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனும், மோகன் லாலும் இணைந்து நடித்த காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.