கமல்ஹாசன் தனது நடிப்பில் வரவிருக்கும் இந்தியன் 2 படத்தின் டிரெய்லரை மும்பையில் செவ்வாய்கிழமை வெளியிட்டார். டிரெய்லர் வெளியீட்டு விழாவில், தற்போதைய அரசியல் சூழ்நிலையில் அரசைக் கேள்விக்குள்ளாக்கும் வலுவான அரசியல் படங்களை தயாரிப்பது குறித்து indianexpress.com நடிகரிடம் கேட்கப்பட்டது. கேள்விகளைக் கேட்பவர்கள் பெரும்பாலும் ‘தேச விரோதிகள்’ என்று முத்திரை குத்தப்படுகிறார்கள் என்றும், இந்தச் சூழலில் அவர் எப்படி இதுபோன்ற படங்களைத் தயாரிக்கிறார் என்றும் அவரிடம் கேட்கப்பட்டது.
ஆங்கிலத்தில் படிக்க: Kamal Haasan says ‘there is risk’ in making films questioning the establishment as ‘government can get angry’
அரசைக் கேள்விக்குள்ளாக்கும் படங்களை தயாரிப்பது கடினமா என்று கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், “இது ஆங்கிலேயர்கள் காலத்திலிருந்தே ஒரு பிரச்சனை. அப்போதும் மக்கள் படம் தயாரித்துக் கொண்டிருந்தனர். அந்த மாதிரியான படங்களை நாங்கள் தொடர்ந்து தயாரிப்போம், யார் உயர்மட்டத்தில் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. அரசாங்கத்தை கேள்வி கேட்பது குடிமக்களின் உரிமை. அது திரைப்படத் தயாரிப்பாளருக்கு மட்டுமல்ல, அந்தக் கேள்விகளைக் கேட்பது குடிமகனின் உரிமை.” என்றும் அவர் கூறினார்.
நடிகர் கமல்ஹாசன் அரசியல் படங்கள் நடிக்கும்போது கலைஞர்கள் எப்படி ஆபத்தை எதிர்கொள்கிறார்கள் என்பது பற்றி பேசினார். “கலைஞர்களாகிய நாங்கள் உங்களில் பலரைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். கைதட்டலுக்கு நன்றி, நாங்கள் உங்கள் பிரதிநிதிகள் என்று நாங்கள் நம்புகிறோம், எனவே, நாங்கள் கில்லட்டின் (பிரெஞ்சுப் புரட்சியின்போது அரசால் பயன்படுத்தப்பட்ட கொலைக்கருவி) பற்றி சிந்திக்காமல் தைரியமாக பேசுகிறோம். ஆமாம், ஆபத்து உள்ளது, அரசாங்கம் கோபப்படலாம், ஆனால், உங்கள் கைதட்டல் அந்த நெருப்பை அணைக்கிறது, எனவே அதை சத்தமாக கை தட்டுங்கள்” என்று கூறினார்.
கமல்ஹாசன் இந்தியன் படத்தில் ஊழலுக்கு எதிராகப் போராடும் சேனாபதியாக நடித்தார், அதுவே இந்தியன் 2-வின் மையக் கருவாகத் தொடர்கிறது. கமல்ஹாசன் “அப்படியானால், க்யா மெயின் நஃப்ரத் கரு, யா ஷுக்ரியாதா? (நான் நன்றி சொல்ல வேண்டுமா, அல்லது கண்டிக்க வேண்டுமா?) நாம் என்ன செய்தோம்? நாம் தான்! மேலும் அரசியல்வாதிகள் வேறு யாருமல்ல, நம்மில் ஒருவர்தான். ஊழலுக்கு நாம் அனைவரும் பொறுப்பு, நாம் அனைவரும் நம் எண்ணங்களை மாற்ற வேண்டும், நம் எண்ணங்களை மாற்றுவதற்கான சிறந்த நேரம் தேர்தல்கள் ஆகும். நாம் எவ்வளவு ஊழல்வாதிகளாக மாறுகிறோம் என்பதற்கான நினைவூட்டல்கள் இவை. ஊழலால் எதுவும் மாறவில்லை, கூட்டு மனசாட்சியால் அனைத்தும் மாறும்.” என்று கூறினார்.
இந்தியன் 2 படத்தின் வாசகம், “பூஜ்ஜிய சகிப்புத்தன்மை. சமூகத்தில் சகித்துக்கொள்ள கடினமாக இருக்கும் விஷயங்கள் என்ன என்று கேட்டபோது, கமல் “காந்தியின் ரசிகன் என்றாலும், சகிப்புத்தன்மை குறித்த படிப்பினைகளுக்கு எதிரானவன்” என்று கூறினார். கமல்ஹாசன் “நான் காந்திஜியின் தீவிர ரசிகன். அவர் உங்களுக்கு சகிப்புத்தன்மையைக் கற்றுக் கொடுத்தார் என்று அவர்கள் கூறுகிறார்கள், சகிப்புத்தன்மையைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?, நான் அந்த சகிப்புத்தன்மையின் பெரிய ரசிகன் அல்ல என்று சொல்கிறேன். காந்திஜி என் ஹீரோ, ஆனால், நீங்கள் யாரை சகித்துக்கொள்கிறீர்கள், நண்பரை அல்ல. எனவே, உலகில் நட்பு வளர வேண்டும் என்று விரும்புகிறேன். நீங்கள் தலைவலியை சகித்துக்கொள்கிறீர்கள்! சமுதாயத்திற்குத் தலைவலியாக இருக்கும் எதையும் நீங்கள் பொறுத்துக் கொள்ளக்கூடாது. மருந்தைக் கண்டுபிடியுங்கள், அதை ஒழியுங்கள்.” என்று கூறினார்.
ஷங்கர் இயக்கியுள்ள இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.