”10 கோடியை திருப்பி தரல” - கமல் ஹாசன் மீது கே.இ.ஞானவேல் ராஜா புகார்
Kamal Haasan - K.E.Ganavel Raja: நான்கு ஆண்டுகள் ஆகியும், தமது படத்தில் நடிக்க கமல் முன் வரவில்லை. மேலும் தன்னிடம் வாங்கிய ரூபாய் 10 கோடியை அவர் திருப்பி தரவில்லை.
KE Ganavel Raja files a complaint against Kamal Haasan: தன்னிடம் வாங்கிய 10 கோடி ரூபாயை இன்னும் கொடுக்கவில்லை என, நடிகர் கமல் ஹாசன் மீது தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.
Advertisment
அந்த புகாரில், “கடந்த 2015- ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் உத்தமவில்லன் படம் வெளியாவதில் சில சிக்கல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கமல்ஹாசன் தம்மை அணுகியதாகவும், தமது தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பதாக கூறி, முன்பணமாக 10 கோடி ரூபாயை கேட்டு பெற்றதாகவும் ஞானவேல் ராஜா அதில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நான்கு ஆண்டுகள் ஆகியும், தமது படத்தில் நடிக்க கமல் முன் வரவில்லை. மேலும் தன்னிடம் வாங்கிய ரூபாய் 10 கோடியை அவர் திருப்பி தரவில்லை” எனவும் ஞானவேல் ராஜா குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக விளக்கம் கேட்டு, நடிகர் கமல் ஹாசனுக்கு நோட்டீஸ் அனுப்பியது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம். அதற்கு, “லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துடன் மட்டுமே பேச்சு வார்த்தை நடந்ததாகவும், படத்தில் நடித்துக் கொடுப்பதாக, ஞானவேல் ராஜாவிடம் எந்த உத்திரவாதமும் அளிக்கப்படவில்லை” எனவும் கமல் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
முன்னணி நடிகரான கமல் ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்த சம்பவம், தற்போது தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.