/tamil-ie/media/media_files/uploads/2019/02/kamal-haasan-at-pollachi.jpg)
Kamal Haasan, Thevar Magan 2, Sivaji Ganesan, Pollachi Palace, கமல்ஹாசன். தேவர் மகன் 2, சிவாஜி கணேசன்
Kamal Haasan at Pollachi Thevar Magan Palace Photos: கமல்ஹாசனின் திரையுலக பயணத்தில் முக்கியமான படம் தேவர் மகன். வெற்றிப் படம் என்பதுடன் அல்லாமல், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் இணைந்து மிரட்டிய படம் அது! நடிகை கவுதமி அதில் கமல் ஜோடியாக நடித்திருந்தார்.
இந்தியன் படத்தை போலவே இந்த படத்தின் இரண்டாம் பாகமும் வரவேண்டும் என்பது கமல்ஹாசன் ரசிகர்களின் எதிர்பார்ப்பு. பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே தேவர் மகன் 2 படம் வெளிவரும் என்று சூசகமாக கமல்ஹாசன் கூறியிருந்தார். இதனால் ரசிகர்கள் குஷியானார்கள்.
எனினும் கமல் தன் அரசியல், சினிமா என இரண்டிலும் பிசியாக இருக்க, தேவர் மகன் 2 வருமா? என்கிற சந்தேகமும் எழாமல் இல்லை. இந்தச் சூழ்நிலையில் தேவர் மகன் படம் எடுக்கப்பட்ட பொள்ளாச்சியில் உள்ள அரண்மனைக்கு நேரில் சென்றார் நம்மவர். அந்தப் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.