கமல் போல் நடனமாடிய ரசிகர்… ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த உலக நாயகன்

என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை - கமல் நெகிழ்ச்சி

By: Published: June 20, 2020, 12:53:57 PM

Kamal Haasan took to twitter to praise his fan who dances exactly like Kamal : அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் ”அண்ணாத்தே ஆடுறார்” பாடலுக்கு கமல் ஹாசன் போன்றே மிகவும் தத்ரூபமாக ட்ரெட் மில்லில் நடனம் ஆடி அசத்தினார் கமல் ஹாசனின் ரசிகர் ஒருவர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவியது.

மேலும் படிக்க : ”அண்ணாத்த ஆடுறார்” கமல் ஹாசனையே விஞ்சும் ரசிகர்!

கேரளாவை சேர்ந்த அஸ்வின் குமார் என்ற அந்த ரசிகர் ஆடிய நடன காட்சியை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து நான் செய்த நல்வினைகள் என் ரசிகரை சென்று அடைந்ததா என்ற சந்தேகம் எல்லா கலைஞர்களுக்கும் உண்டு. என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது ட்விட்டர் மட்டுமில்லாமல் இன்ஸ்டாகிராம் மற்றும் இதர பக்கங்களிலும் அஸ்வினின் புகழ் தான். நாமும் வாழ்த்துகளை பகிர்ந்து கொள்வோம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Entertainment News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Kamal haasan took to twitter to praise his fan who dances exactly like kamal

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X