”அண்ணாத்த ஆடுறார்” கமல் ஹாசனையே விஞ்சும் ரசிகர்!

ட்ரெட்மில்லில் ஏறி நின்று கொண்டு அண்ணாத்த ஆடுறார் பாட்டுக்கு அப்படியே கமல் ஹாசனை போல் ஆடி அசத்தியுள்ளார்.

By: Published: June 17, 2020, 12:47:47 PM

Tiktok viral video of young man dancing exactly like Kamal Haasan for Annathe aadurar song : கமல் ஹாசன் நடிப்பிற்கு ஒரு பெருங்கூட்டம் ரசிகர்களாய் இருந்தால் அவரின் நடனத்திற்காகவே அவரை போற்றும் ரசிகர்களும் உண்டு. தமிழ் சினிமாவில் கமல் ஹாசனைப் போன்று நடனம் ஆடுவதற்கு வேறு யார் இருக்கிறார்கள் என்றால் அந்த கேள்விக்கு பதிலே இல்லை. நாட்டுப்புற நடனம் துவங்கி பரதம், கதக் என்று எதையும் விட்டுவைப்பதில்லை. ஒரு பாடலுக்காக தானே என்றில்லாமல் அதன் நுணுக்கங்களை அழகாக கற்று வெளிப்படுத்தும் திறனால் தான் அவர் இன்றும் உலக நாயகன்.

அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் ”அண்ணாத்த ஆடுறார்” என்ற பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவை. அந்த பாடலுக்கு நியாயம் சேர்த்த கலைஞர்கள் என்று யாரும் இல்லை. 2013ம் ஆண்டு ஷாகித் கபூர் கூட சில நொடிகள் இந்த பாடலுக்கு ஆடினாலும் சரியான போட்டியை கமல் கண்டதில்லை தான். ஆனால் சமீபத்தில் வெளியான டிக்டாக் வீடியோ ஒன்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

டிக்டாக்கில் வெளியாகியுள்ள இந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் கிட்டத்தட்ட  பார்ப்பதற்கும் கூட கமல் ஹாசன் போன்றே இருக்கிறார். ட்ரெட்மில்லில் ஏறி நின்று கொண்டு அண்ணாத்த ஆடுறார் பாட்டுக்கு அப்படியே கமல் ஹாசனை போல் ஆடி அசத்தியுள்ளார். இதனை பார்த்தால் கமல் தான் ஆடுகிறாரோ என்றும் கூட சந்தேகம் வருகிறது. அத்தனை துல்லியம். இந்த வீடியோவை பார்த்து எஞ்சாய் பண்ணுங்க. இது குறித்து உங்களின் கருத்துகளையும் கீழே பதிவிடுங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Entertainment News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Tiktok viral video of young man dancing exactly like kamal haasan for annaaththa aaduraar song

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X