கமல்ஹாசனின் காலை வாழ்வை கௌரவிக்கும் விதமாக நடைபெற்ற உங்கள் நான் விழாவில், வாழ்த்திப் பேசிய நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், “கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” என்று கூறினார்.
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிலும் முக்கியமான ஆளுமையாக திகழ்பவர் நடிகர் கமல்ஹாசன். கமல்ஹாசனின் களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 60 ஆண்டுகள் ஆகிறது. இந்த 60 ஆண்டுகளில் கமல்ஹாசன், நடிப்பு, இயக்கம், இசை, நடனம் என்று பல துறைகளில் தனது முத்திரையை பதித்து சாதனையாளராக உள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் மட்டுமில்லாமல் அரசியலிலும் களம் இறங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவருடைய 60 ஆண்டு கால சினிமா கலை வாழ்வை கௌரவிக்கும் விதமாக மக்கள் நீதி மய்யம் சார்பில் அண்மையில் அவருடைய பிறந்த நாள் விழாழ் பாலச்சந்தர் சிலை திறப்பு, என முப்பெரும் விழா நடைபெற்றது. அப்போது, நடைபெறுவதாக இருந்த இசைஞானி இளையராஜவின் இசை நிகழ்ச்சி தள்ளிவைக்கப்படுகிறது என கூறப்பட்டது.
17, 2019
இந்த நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கமும் பிரபல விஜய் தொலைக்காட்சியும் இணைந்து, நடிகர் கமல்ஹாசன் தனது 60 ஆண்டு கால வாழ்வை சினிமாவுக்க்காக அர்ப்பணித்ததை கௌரவிக்கும் விதமாக, சென்னை நேரு உள்விளையாட்டரங்கத்தில் உங்கள் நான் விழா நடத்தி வருகிறது.
இந்த விழாவுக்கு நடிகர் கமல்ஹாசன் கருப்பு நிற உடையில் அனைவரையும் கவரும் விதமாக வந்தார். மேடைக்கு வந்த கமல்ஹாசன், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். அதோடு, சினிமா துறையில் தன்னை செதுக்கி தனது வளர்ச்சி காரணமாக அமைந்த 60 ஆளுமைகளைப் பட்டியலிட்டுப் பேசினார்.
17, 2019
இந்த விழாவில் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதே போல, கமல்ஹாசனை வாழ்த்த ஆஸ்கர் விருது பெற்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் வந்தார். ரஹ்மான் மேடை ஏறி கமல்ஹாசனை வாழ்த்தினார். அவர் மேடையில் கமல்ஹாசன், இளையராஜவுடன் பங்கேற்றதை தருணத்தை புகைப்படம் எடுத்து டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
அதே போல, விழாவில் கலந்துகொண்டு கமல்ஹாசனை வாழ்த்திப் பேசிய நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், “கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார். சினிமாவில் இருப்பவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்ற பேச்சு சமீபகாலமாக அதிகரித்திருக்கிறது. கமல், ரஜினி என்ற இரண்டு ஜாம்பவான்கள் இணைந்தால் தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் நல்லது. எல்லாத்துறையினரும் அரசியலுக்கு வரும்போது சினிமாத்துறையினர் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது? அரசியலில் அடுத்த தலைமுறைக்கு மூத்தவர்கள் வழிவிட வேண்டும். நல்லாட்சி தந்த நீங்கள், உங்களின் தம்பிகள் வரும்போது அவர்களுக்கு வழிவிடுங்கள்” என்று கூறினார்.
நடிகர் கமல்ஹாசனை கௌரவிக்கும் உங்கள் நான் விழாவுக்கு நடிகர் ரஜினிகாந்த்தும் வந்து வாழ்த்த உள்ளார்.
இந்த நிகழ்ச்சியை விஜய் டிவியின் நீயா? நானா? நிகழ்ச்சித் தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்குகிறார்.
நடிகர் கமல்ஹாசனை பாராட்டும் உங்கள் நான் விழா ரசிகர்களின் ஆரவாரத்துடன் நடைபெற்றுவருகிறது.