இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் கலவயான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில், படத்தின் நேரத்தில் 15 நிமிடத்தைக் குறைக்க படக்குழு முடிவு செய்துள்ளது.
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் - உலக நாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் இந்தியன் முதல் பாகம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. 28 ஆண்டுகள் கழித்து, இந்தியன் 2 படத்தில் இந்த இரண்டு ஜாம்பவான்களின் கூட்டணி இணைந்தது. இந்தியன் 2 படம் அறிவிப்பு வெளியான நாள் முதல் சமூக ஊடகங்களில் அந்த படத்தைப் பற்றி பேசப்படாத நாட்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவுக்கு இந்தியன் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கசக்கமாக எகிறியிருந்தது.
இந்தியன் 2 படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். சினிமா ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
அதே நேரத்தில், இந்தியன் முதல் பாகம் அளவுக்கு இந்தியன் 2 படம் இல்லை என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்தியன் 2 படம் மிக நீளமாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்ததால், இந்தியன் 2 திரைப்படத்தின் நீளத்தை 15 நிமிடங்கள் படத்தை நீக்க படக்குழு முடிவு செய்துள்ளது. இந்தியன் 2 படம் 3 மணி நேரம் கொண்டது. அதனால், இந்தியன் 2 படத்தைக் குறைக்க படக்குழு முடிவு செய்தது. மேலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் இந்தியன் 2 படத்தின் நீளம் குறைக்கப்பட்டு அந்த படமே திரையரங்குகளில் திரையிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“