Advertisment

புதிய நாடாளுமன்ற திறப்பில் கமல்ஹாசன் பங்கேற்பு: காரணம் குறித்து விளக்கம்

புதிய பாராளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிப்பதை எதிர்க்கட்சிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

author-image
WebDesk
May 27, 2023 18:43 IST
Kamal Haasans statement says that opposition parties should reconsider their decision to boycott the inauguration of the new Parliament

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிக்கும் முடிவை எதிர்க்கட்சிகள் மறுபரீசிலனை செய்ய வேண்டும் என கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழா தொடர்பாக நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனத் தலைவருமான கமல்ஹாசன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழா பெருமைமிகு தருணம். இதற்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisment

மேலும் தேசிய நலன் கருதி இதனை நான் உங்களுடன் கொண்டாட கடமைப்பட்டுள்ளேன். ஆனால் இத்தருணத்தில் நாம் அரசியல் ரீதியாக பிளவுப்பட்டுள்ளோம்.

இந்தத் தருணத்தில் எனக்குள் ஓர் கேள்வி எழுகிறது. குடியரசுத் தலைவர் அழைக்கப்படாதது ஏன்? மசோதாக்கள் நிறைவேற்றி அவரிடம்தான் கையெழுத்துக்கு அனுப்பப்படும்.

கூட்டத் தொடரை நடத்தவும் ஒத்திவைக்கவும் அதிகாரம் பெற்றவர் அவர்தான். ஆகவே புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவரை பிரதமர் அழைக்க வேண்டும்.

மேலும் எதிர்க்கட்சிகளும் தங்களின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

புதிய பாராளுமன்ற கட்டட திறப்பு விழாவில் பங்கு கொள்ள மாட்டோம் என காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Dmk #Parliament #Congress #Kamal Haasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment