Kamal Haasan fitness photos viral: நடிகர் கமல்ஹாசன் இன்னும் கட்டான உடற்கட்டுடன் இருப்பதற்கு சிறிய வயதில் இருந்து செய்துவந்த தீவிர உடற்பயிற்சிதான் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர். கமல் ஹாசன் இளைஞராக இருந்தபோது தீவிரமாக உடற்பயிற்சி செய்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
உலக நாயகன் கமல்ஹசானின் சினிமா பயணம் 1960-ல் வெளியான களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாகத் தொடங்கி புராஜெக்ட் கே வரை சினிமா துறையில் மணி விழா கண்டு பல சாதனைகளைப் படைத்துள்ளார்.
கமல்ஹாசன் சினிமா உலகில் தனது 68 வயதுக்குள்ளாகவே மணிவிழா கண்டுள்ளார். கமல்ஹாசன் நடிப்புக்கு நாயகன், தேவர்மகன், மகாநதி, இந்தியன், தசாவதாரம், அவ்வை சண்முகி, குறுதிப் புனல், அன்பே சிவம் என சாட்சியம் சொல்லும் படங்களின் வரிசை நீண்டு கொண்டே செல்லும்.
சினிமாவில் நடிப்பு மட்டுமின்றி இசை, இயக்கம், எழுத்தாளர் என்று பன்முகம் கொண்ட உலகநாயகன் கமல்ஹாசன் இன்னும் முன்னணி நடிகராக வசூலில் பாக்ஸ் ஆஃபீஸை நிரப்புபவராக இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்தியஅளவில் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு ரசிகர்கள் உள்ளனர். தமிழ் சினிமாவில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வரும் கமல் ஹாசன், கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்தார்.
விக்ரம் படத்தை தொடர்ந்து, ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன், எச்.வினோத் இயக்கத்தில் தனது 233 வது படத்தில் நடிக்க உள்ளார். இதைத் தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் தனது 234 வது படத்தில் நடிக்கவுள்ளார்.
கமல்ஹாசன் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் அதே நேரத்தில் அரசியல் களத்திலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
கமல்ஹாசனுக்கு தற்போது 68 வயதானாலும் இன்னும் கட்டான உடற் கட்டுடன், வசீகர தோற்றத்துடன் இருக்கிறார். இதற்கு கமல்ஹாசன் சிறிய வயது முதல் உடற்பயிற்சி செய்து வருவதும் ஒரு காரணம். கமல்ஹாசன் தீவிரமாக உடற்பயிற்சி புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இளம் வயதில் கமல்ஹாசன் உடற்பயிற்சி செய்யும்போது எடுத்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.