Kamal Hassan, Vijay Sethupathi starrer Vikram Movie: கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் படம் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், முழு படமும் திருட்டுத் தனமாக ஆன்லைனில் வெளியாகி இருப்பது படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் தயாராகியுள்ள விகரம் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, கமல்ஹாசனின் நடிபில் வெளியாகியுள்ள விக்ரம் படம் செம்மையான கமர்ஷியல் கண்டெண்ட் கொண்ட படம் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
அது மட்டுமல்லாமல், விக்ரம் படத்தில் கமல்ஹாசனுடன், பகத் பாசில், சூரியா, விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ் என தென்னிந்திய சினிமா நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். விக்ரம் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கி வெளியிட்டுள்ளது. விக்ரம் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, உதயநிதி, கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். கமல்ஹாசனின் படங்களில் விக்ரம் புதிய வசூல் சாதனை செய்யும் என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.
சினிமாத் துறையினருக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும், திரைப்படங்களை திருட்டுத் தனமாக இணையத்தில் வெளியிடும் பைரஸிக்காரர்கள், விக்ரம் முழு படத்தையும் ஆன்லைனில் வெளியிட்டு லீக் செய்துள்ளனர். இது கமல்ஹாசன் ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. விக்ரம் படம் லீக் ஆன சில நிமிடங்களிலேயே பலரும் டவுன்லோட் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். விக்ரம் படம் ரிலீஸ் ஆன அன்றே ஆன்லைனில் திருட்டுத் தனமாக வெளியிடப்பட்டிருப்பது படக்குழுவினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"