Advertisment
Presenting Partner
Desktop GIF

HBD KamalHaasan : 66 வயது இளைஞனுக்கு பிடித்தவை, பிடிக்காதவை, ரசித்தவை குயிக் லிஸ்ட்!

மய்யம்’ என்ற பத்திரிகையை சில காலம் நடத்தினார். அதை மீண்டும் நடத்த வேண்டும் என்பது அவருடைய விருப்பம்

author-image
WebDesk
New Update
kamal hassan birthday hbd kamal bigg boss

kamal hassan birthday hbd kamal bigg boss

kamal hassan birthday hbd kamal bigg boss : தனக்கு தவறென்று பட்டதைத் தயங்காமல் பேசும் கலைஞன், 66 வயதிலும் கற்றுக் கொண்டிருக்கும் இளைஞன் கமல்ஹாசன்.

Advertisment

ராமநாதபுரம் மாவட்டத்திலிருக்கும் பரமக்குடியில் குற்றவியல் வழக்கறிஞராக இருந்த டி.சீனிவாசனுக்கும், ராஜலக்ஷ்மி அவர்களுக்கும் மகனாக பிறந்தவர் கமல்ஹாசன். நான்கு குழந்தைகளில், கடைக்குட்டியாகப் பிறந்த கமலுக்கு, இளம் வயதிலிருந்தே, படிப்பைத் தவிர மற்ற கலைகளில் ஆர்வம் அதிகமிருந்ததால், மிகுதியான நேரத்தை அதில் செலவிட்டார்.

நவம்பர் 7ஆம் தேதி அவருக்குப் பிறந்த நாள். ‘தமிழ்நாட்டின் நாளைய முதல்வர்’ என்றெல்லாம் கூட எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் கமலைப் பற்றய சுவாரசியமான விஷயங்களில் குயிக் லிஸ்ட்.

1. எவ்வளவு நேரம் ஆனாலும், நின்றுகொண்டே பேசுவதுதான் கமல் ஸ்டைல். எட்டு மணி நேரம் ஆனால் கூட, கொஞ்சமும் முகம் சுளிக்காமல் அவ்வளவு உற்சாகத்துடன் நின்றபடியே பேசிக் கொண்டிருப்பார். எவ்வளவு பிஸியாக இருந்தாலும், தினமும் உடற்பயிற்சி செய்யத் தவறுவதில்லை. காலில் ஆபரேஷன் செய்து ஓய்வில் இருந்தபோது கூட, சில மாதங்களிலேயே உடற்பயிற்சியை ஆரம்பித்துவிட்டார்.

2. வேறு மொழிகளில் நடிக்கும்போது, அந்த மொழிகளில் உள்ள வார்த்தைகளை சரியாக உச்சரிப்பது பெரும்பாலானோருக்கு கஷ்டம். ஆனால், அந்த வார்த்தைகளின் அர்த்தங்களையும் தெரிந்துகொண்டு சரியாக உச்சரிப்பார் கமல்.உலகத் திரைப்படங்கள் பார்ப்பது பிடிக்கும். முன்பெல்லாம் தியேட்டர், உலகத் திரைப்பட விழாக்களுக்குச் சென்று படங்கள் பார்ப்பார். இப்போது அலுவலகத்திலேயே ஹோம் தியேட்டரில் பார்த்து விடுகிறார். எல்லா மொழிப் படங்களின் டிவிடிக்களும் அங்கு இருக்கின்றன. சமீபத்தில் ‘மெர்சல்’ படத்தைக் கூட இந்த ஹோம் தியேட்டரில்தான் பார்த்தார்.

3. இவர் போகாத உலக நாடுகளே இல்லை. ஷூட்டிங் இல்லையென்றால், ஏதாவது ஒரு வெளிநாட்டுக்கு கிளம்பி விடுவார். சென்னையில் அடிக்கடி விசிட் செய்கிற இடம், நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் ஹோட்டல்.

4. நாமெல்லாம் கமல்ஹாசனை ‘என்சைக்ளோபீடியா’ என்று குறிப்பிடுவது உண்டு. ஆனால், அவரோ எழுத்தாளர் அனந்துவை ‘என்சைக்ளோபீடியா’ என்று அழைப்பார். சினிமா, டெக்னாலஜி என எந்த விஷயமாக இருந்தாலும் அவருடன் விவாதித்திருக்கிறார்.

5. சாப்பாட்டைப் பொறுத்தவரை ‘இதுதான் வேண்டும்’, ‘அதுதான் வேண்டும்’ என்ற கண்டிஷன் கிடையாது. எந்த உணவாக இருந்தாலும் ரசித்து, ருசித்து அளவாகச் சாப்பிடுவார்.

6. கமல், அசைவப் பிரியர். நடப்பன, பறப்பன, ஊர்வன, நீந்துவன என எதையும் விட்டுவைக்க மாட்டார். இடையில் கொஞ்ச காலம் சைவமாக இருந்தவர், மறுபடியும் அசைவத்துக்கு மாறிவிட்டார்.

7. கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, சிவாஜி கணேசன், விஜயகாந்த், கார்த்திக் என சினிமாவில் இருந்து எத்தனையோ பேர் அரசியலில் இறங்க, அந்த ஆசை கொஞ்சம்கூட இல்லாதவர். காலத்தின் கட்டாயத்தால் இன்று தீவிர அரசியலை நோக்கி அடியெடுத்து வைத்திருக்கிறார்.

8. கமல் சீரியல் பார்ப்பார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆனால், அவர் பார்ப்பது தமிழ் சீரியல்கள் கிடையாது. ஹிட்டான வெளிநாட்டு சீரியல்களை விரும்பிப் பார்ப்பார்.

9. கோலிவுட் என்று சொன்னால் கமலுக்குப் பிடிக்காது. ‘தமிழ்த் திரையுலகம் என்று சொல்லுங்கள்’ என வேண்டுகோள் வைப்பார்.

தனக்குப் பிடித்த புத்தகங்கள், படங்களை நண்பர்கள் மற்றும் உதவி இயக்குநர்களுக்குப் பரிந்துரைப்பார்.இந்திய சினிமாவில் பேசும்படம் வெளியாகி 50 ஆண்டுகளுக்குப் பிறகு, வசனங்களே இல்லாத ஒரு படத்தில் நடித்தார். அந்தப் படத்துக்கு ‘பேசும் படம்’ எனத் தலைப்பு வைத்த குறும்பு, கமலுக்கே உரிய தனிச்சிறப்பு.

10. கமலுக்குப் பிடித்த ஹாலிவுட் நடிகர், மார்லன் பிராண்டோ. ஹிந்தியில் திலீப் குமார். தமிழில் சிவாஜியும் நாகேஷும்.தமிழ் பேசும் நாயகிகளை அதிகம் பிடிக்கும். ஆனால், தமிழ் பேசும் நாயகிகள் குறைவாக இருக்கிறார்கள் என்பது அவருடைய வருத்தம். அதனால் தான் அபிராமி, சினேகா, த்ரிஷா, ஆன்ட்ரியா என தமிழ் பேசும் நாயகிகளுக்கு தன்னுடைய படங்களில் வாய்ப்பு கொடுக்கிறார்.

11. அபார நினைவுத்திறன் கொண்டவர். சின்ன வயதில் நாடகங்களில் நடித்தபோது கேட்ட பாடல்களை, இப்போதும் அடிபிசகாமல் பாடுவார். தெருக்கூத்துப் பாடல்களையும் தெரிந்து வைத்திருக்கிறார்.நண்பர்களுடன் ஜாலி மூடில் இருந்தால், பழைய பாடல்களைப் பாட ஆரம்பித்து விடுவார். நேயர் விருப்பம் போல் நண்பர்கள் அடுத்தடுத்த பாடல்களைக் கேட்டுக் கொண்டேயிருக்க, அவரும் பாடிக்கொண்டே இருப்பார்.

12. வாட்ச் கட்டுவது என்றால் கமலுக்கு ரொம்பவே பிடிக்கும். வீட்டில் பெரிய வாட்ச் கலெக்‌ஷனே வைத்திருக்கிறார். அணியும் ஆடைக்கு ஏற்றதுபோல் தேர்ந்தெடுத்து வாட்ச் கட்டுவது கமலின் வழக்கம்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Kamal Haasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment