'மூக்கை உடைப்பேன்; ஆள் வச்சு அடிப்பேன்': பிக்பாஸில் வன்முறை பேச்சு; மஞ்சள் அட்டை காண்பித்த கமல்ஹாசன்

மூக்கை உடைப்பேன் என்று பேசிய பிக்பாஸ் போட்டியாளர் விஜய் வர்மாவுக்கு கமல்ஹாசன் மஞ்சள் அட்டை கொடுத்து கண்டித்துள்ளார்.

மூக்கை உடைப்பேன் என்று பேசிய பிக்பாஸ் போட்டியாளர் விஜய் வர்மாவுக்கு கமல்ஹாசன் மஞ்சள் அட்டை கொடுத்து கண்டித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
பிக்பாஸில் வன்முறை பேச்சு

பிக்பாஸில் வன்முறை பேச்சு

மூக்கை உடைப்பேன் என்று பேசிய பிக்பாஸ் போட்டியாளர் விஜய் வர்மாவுக்கு கமல்ஹாசன் மஞ்சள் அட்டை கொடுத்து கண்டித்துள்ளார்.

Advertisment

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த 1ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் தொடங்கிய முதல் வாரத்திலேயே வீட்டில் அதிக பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. போட்டியாளர் ஜோவிக்காவிற்கு படிப்பு வரவில்லை என்ற விஷயம் பெரும் பேசு பொருளாகி, அதற்கு அவர் கோவமடைந்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று பிக்பாஸ் 7 குழுவினர் முதல் புரோமோவை வெளியிட்டுள்ளனர். இதில் விஜய் வர்மாவை கமல் கண்டித்துள்ளார். “ கைப்பட்டு மூக்கு உடையும். வெளியில் என்னை விரும்பும் நபர்கள் இருக்கிறார்கள்” என்றெல்லாம் பேசினீர்கள் விஜய் வர்மா என்று கமல் கேள்வி எழுப்புகிறார். அதற்கு அப்படி இல்லை சார் என்று கூறியதும்.

எங்களிடம் குறும்படம் இருக்கிறது சார் என்று சொல்லிவிட்டு, அவரது செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக மஞ்சள் அட்டையை கமல் காட்டுகிறார். மேலும் இந்த மஞ்சள் அட்டையை மூன்று முறை வாங்கும் போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என்றும் கூறுகிறார். இந்நிலையில் கமலின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

TAMILNEWS

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: