vadivelu | kamalhaasan | வைகை புயல் வடிவேலு கதாநாயகனாக அறிமுகமாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கட்டிப் போட்ட படம் 23ஆம் புலிகேசி. இந்தப் படத்தில் அவரின் நடிப்பு பரவலாக பேசப்பட்டது.
பிரபல கார்டூனிஸ்ட் சிம்பு தேவன் இயக்கிய இந்தப் படத்தை ஷங்கர் தயாரித்து இருந்தார். படத்தில் வடிவேலுவுக்கு இரட்டை வேடம். படத்தில் தற்கால அரசியலுக்கு சற்றும் பஞ்சம் இருக்காது. இந்தப் படம் வெளியாகி கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் கடந்துவிட்டது.
இந்தப் படத்தில் வடிவேலுவின் சுயநலமிக்க மாமனாக நாசர் நடித்திருப்பார். இப்படம் குறித்து நாசர், பத்திரிகையாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணனுக்கு யூடியூப் ஒன்றில் பேட்டி அளித்திருந்தார்.
அதில் படத்தில் ஒரு காட்சி பற்றி பகிர்ந்துகொண்டார். எதிரி நாட்டு மன்னர் தியாகு படை திரட்டி போருக்கு வரும் சமயத்தில் வடிவேலு சமாதானம் பேசலாமா என்ற எண்ணத்தில் துவாரத்தின் வழியே எட்டிப் பார்ப்பார்.
முன்னதாக வடிவேல் வைத்திருக்கும் வாள் தொட்டாலே வீழ்ந்துவிடும். மந்திரியிடம் இருக்கும் வாளும் அதேபோல்தான் காணப்படும். இதனால் கோபத்தில் கொல்லருக்கு தண்டனை வழங்கிவிட்டு தொடர்ந்து தூவாரத்தில் மூடியை சுற்றி சுற்றி விளையாடிக் கொண்டே பயத்தில் இருப்பார். இந்தக் காட்சியை உலக நாயகன் கமல்ஹாசன் வெகுவாக பாராட்டியுள்ளார்.
இவர்தான் நமக்கான சார்ளி சாப்ளின், என்னவொரு நடிப்பு கமல்ஹாசன் புகழ்ந்துள்ளார். இதைக் கேள்விப்பட்டதும் வடிவேலு நேரடியாக வந்து கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“