Advertisment

கமல் நடிப்பில் 'விக்ரம்' : பட டீஸர் வெளியீடு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் அடுத்து நடிக்க இருக்கும் படத்திற்கு 'விக்ரம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
கமல்  நடிப்பில் 'விக்ரம்' : பட டீஸர் வெளியீடு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் அடுத்து நடிக்க இருக்கும் படத்திற்கு 'விக்ரம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

Advertisment

மாநகரம்,  கைதி போன்ற திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கமலில் அடுத்தப்படமான 'விக்ரம்' திரைப்படத்தை இயக்குகிரார்.

விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள 'மாஸ்டர்' என்ற இவரின் திரைப்படம் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

1986 ஆம் ஆண்டில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் எனும் திரைப்படம் வணிக ரீதியாக வெற்றிப் பெற்றது.  இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சத்யராஜ், அம்ஜத்கான், அம்பிகா, டிம்பிள் கபாடியா, லிசி, சாருஹாசன், ஜனகராஜ் ஆகியோர் நடித்திருந்தனர்.

 

 

கமல்ஹாசனின் 'விக்ரம்'   படத்திற்கான ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த படம் ராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரிக்கும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. கமலின் 232-வது படம் இதுவாகும். அனிரூத் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார்.

மாநகரம் மூலம் வெளிச்சத்துக்கு வந்த லோகேஷ், தான் தோன்றும் ஒவ்வொரு மேடையிலும், கமல்ஹாசனின் தீவிர ரசிகன் நான், அவரின் படங்களை பார்த்து தான் சினிமாவை கற்றுக்கொண்டேன், எனச் சொல்லி வந்த நிலையில் தற்போது கமலையே இயக்க இருக்கிறார். இதனால் கமலின் படத்தை அணு அணுவாக செதுக்குவார் என்று இப்போதே அவரின் ரசிகர்கள் கூற ஆரம்பித்துவிட்டனர்.

Kamal Haasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment