கமல்ஹாசனின் திரை வாழ்க்கையில் தசாவதாரம் அவரை மிகவும் சோதித்த ஒரு படம் எனலாம். பத்து கேரக்டர்களின் அவர் காட்டிய நடிப்பு அபாரம் என்பதைத் தாண்டி, நிறைய வலிகளின் எதிரொலிப்பு என்றால் அது மிகையாகாது.
Advertisment
"இப்படத்தில் எப்போதெல்லாம் நான் சோர்வடைவேனோ அப்போதெல்லாம் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் என்னை தேற்றுவார். அவர் சோர்வடையும் போது, நான் அவருக்கு ஆறுதலாக இருப்பேன். இப்படியே ஒருவர் மாற்றி ஒருவர் தெம்பு கொடுத்தே இப்படத்தை முடித்தோம்" என்று தசாவதாரம் குறித்து கமல்ஹாசன் தனது அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார்.
இந்நிலையில், அப்படத்தின் வரும் ஒவ்வொரு கேரக்டரின் வாய்ஸ் மாடுலேஷனை, விகடனுக்கு சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் செய்து காட்டி ரசிகர்களுக்கு நேரடியாக அந்த மேஜிக்கை நிகழ்த்தி காட்டியிருக்கிறார் உலக நாயகன்.
Advertisment
Advertisements
அதாவது, கமல்ஹாசனின் வெவ்வேறு படங்களின் ஹிட் வசனங்களை, தசாவதாரம் கேரக்டர்கள் வாய்ஸில் பேசி அசத்தியிருக்கிறார் உலக நாயகன்.