நான் எப்படி சினிமாவுக்கு வந்தேன் - மனம் திறக்கிறார் ஸ்ருதிஹாசன்
Shruti haasan : சினிமாவில் நுழைவதற்கு மட்டுமே நாங்கள் எங்களது பெற்றோரின் தயவை பயன்படுத்தினோம். அதற்கு பிறகு தங்களது சொந்த முயற்சியால் தங்களது இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளோம்.
Shruti haasan : சினிமாவில் நுழைவதற்கு மட்டுமே நாங்கள் எங்களது பெற்றோரின் தயவை பயன்படுத்தினோம். அதற்கு பிறகு தங்களது சொந்த முயற்சியால் தங்களது இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளோம்.
நான் எனது எப்பா கமல்ஹாசன் மூலமே, சினிமாவுக்கு வந்தேன். ஆனால், என் சொந்த திறமையால் தன் இடத்தை தக்கவைத்துள்ளதாக நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.
Advertisment
பாலிவுட் திரையுலகின் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் தற்கொலை நிகழ்வுக்கு அவர் சார்ந்த திரையுலகில் நெபோடிசம் இருந்ததே காரணமாக ஒருசாரார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சினிமா பத்திரிகைக்கு நடிகை ஸ்ருதிஹாசன் பேட்டியளித்துள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, நான் எனது அப்பா கமல்ஹாசனின் தயவால் தான் சினிமாவுக்கு வந்தேன். இதில் எவ்வித குற்றமும் நான் கண்டதில்லை. நான் தமிழில் முதன்முதலில் அறிமுகமான படம் ஏழாம் அறிவு, இந்த படத்தில் நடிகர் சூர்யா உடன் இணைந்து நடித்தேன். நடிகர் சூர்யாவும், அவரது அப்பா சிவக்குமாரின் மூலமாகவே திரைத்துறைக்கு வந்தவர். ஆனால், அவர் இங்கு தனது கடின உழைப்பை தந்ததால், அடுத்தடுத்த படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக உள்ளார்.
Advertisment
Advertisements
சினிமாவில் நுழைவதற்கு மட்டுமே நாங்கள் எங்களது பெற்றோரின் தயவை பயன்படுத்தினோம். அதற்கு பிறகு தங்களது சொந்த முயற்சியால் தங்களது இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளோம். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் இந்த நடைமுறையே உள்ளது. பாலிவுட் திரையுலகில் இந்த நடைமுறை இல்லை என்று தான் கருதுவதாக தெரிவித்துள்ளார்.
நடிகை ஸ்ருதிஹாசனின் நடிப்பில் லாபம், டோலிவுட்டில், கிராக், பலுபு உள்ளிட்ட படங்கள் விரைவில் வெளியாக உள்ளன.
நடிப்புத்துறை மட்டுமல்லாது, பின்னணிப்பாடகி, இசை சேவையிலும், ஸ்ருதிஹாசனின் பங்கு அளப்பரியது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil