/tamil-ie/media/media_files/uploads/2019/01/a292.jpg)
Kamalhaasan's Indian 2 film south korean actress suzy bae shankar
'எனது திரையுலகின் கடைசி திரைப்படம் இந்தியன் 2' என்று கமல்ஹாசனே அறிவித்திருப்பதால், இந்தியன் 2 படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதுவும், ஷங்கர் இயக்கத்தில் நடிக்கவிருப்பதால், கடந்த 15 ஆண்டுகளில் காணாத மிகப்பெரிய வெற்றியை ருசிக்க வேண்டும் என கமல் தீவிரமாக உள்ளார்.
அதுமட்டுமின்றி, தனது அரசியல் பயணத்திற்கான மைலேஜ்ஜை இப்படம் மூலம் அதிகரிக்கவும் கமல் தரப்பு எண்ணுகிறதாம்.
இந்நிலையில், திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் 18ம் தேதி தொடங்கவுள்ளது. லைகா தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படம் 2020 ஆம் ஆண்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் கமல் ஜோடியாக காஜல் நடிப்பது உறுதியாகியிருக்கும் நிலையில் சிம்பு, துல்கர் சல்மான் ஆகியோரும் ஆகியோர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
Buzz is that, South Korean Actress and Singer #SuzyBae might be roped in to play a key role in Kamal Haasan - Dir Shankar's #Indian2.
The movie, which is expected to begin shooting from January 18, will have a major portion shot in Taiwan reportedly. pic.twitter.com/tyxJkh8Om8
— Christopher Kanagaraj (@Chrissuccess) 5 January 2019
இந்த நிலையில், இப்படத்தில் தென்கொரியாவின் பிரபல நடிகையும் பாடகியுமான Suzy Bae என்பவர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் தாய்வானில் படமாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.