எம்.எஸ்.வி மறந்துபோன டியூனை அவருக்கே நினைவுபடுத்திய கமல்ஹாசன்: வின்டேஜ் வீடியோ

கமல், எம்எஸ்வி இருவரும் மாறிமாறி தங்கள் அனுபவங்களை பகிர்ந்த கொண்ட அந்த பழைய விண்டேஜ் வீடியோ இதோ!

Kamalhassan and ms viswanathan
Kamalhassan and ms viswanathan old interview video goes viral on social media

நடிகர் கமல்ஹாசன், இயக்குனர், படத் தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர், நடன இயக்குனர், அரசியல்வாதி என பன்முகத் திறமை கொண்டவர். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ’விக்ரம்’ படத்திலும் நடித்து வருகிறார். அதில் இவருடன் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகளும் நடிக்கின்றனர்.

இந்நிலையில், உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் மெல்லிசை மன்னன் எம்.எஸ்.விஸ்வநாதன் பல ஆண்டுகளுக்கு முன், சென்னை வானொலி நிலையத்துக்கு அளித்த பேட்டி ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில்’ எம்எஸ்வி-யின் இசை பயணம் குறித்து கமல் கேட்கிறார். அதில் எம்எஸ்வி தன்னுடைய ஆர்மோனிய பெட்டியை, தீண்டியபடியே மாமரத்து வண்டு, பேசுவது கிளியா, வீடு வரை உறவு ஆகிய பாடல்கள் ஒரே மெட்டில் இருப்பதை பற்றி கமலிடம் கூறுகிறார்.

அப்போது கமலுக்கு அவருடைய பள்ளி நாட்கள் நியாபகம் வர, நாங்கெல்லாம் அந்த வயதில் பாலும், பழமும் கைகளில் ஏந்தி பாடலின் முதல்வரியை மட்டும் வெவ்வேறு ராகங்களில் பாடல் முடியும் வரை பாடிக் கொண்டிருப்போம் என்று கூறி சிரிக்கிறார்.

பிறகு, எம்எஸ்வி. நீங்கள் ஒரு டான்சர். எனக்கு உங்களிடம் ஒரு ஆசை; நான் ஒரே ஒரு ஜதியை சொல்கிறேன். உங்களால் ஆட முடியுமா என கூறி, ஜதியை பாடுகிறார். அவர் பாடத் தொடங்கும் போதே, கமலின் தலையும், காலும் ராகத்தில் ஆடத் தொடங்கிவிட்டது. ஆனால்  கமல்,’ எனக்கு நீங்கள் பாடும் போது எழுந்து ஆட வேண்டும் என ஆசையாக உள்ளது. ஆனால் காலில் இப்போது தான் அடிப்பட்டு காயம் உள்ளது என கூறுகிறார்.

பிறகு, கமல்’ தான் பல நாட்களாக கேட்க நினைத்த கேள்வியை எம் எஸ்வியிடம் கேட்கிறார். நீங்கள் தாளம் அமைக்கும் போது உங்கள் உடலும் சேர்ந்து ஆடுகிறதே.. நீங்க டான்ஸ் கத்துக்கீட்டிங்களா? என கேட்கிறார். அதற்கு பதிலளித்த எம்எஸ்வி, என்னுடைய ஆரம்பகாலத்தில் நடிக்க வந்தேன். ஆனால், என்னை லாய்க்கு என்று கூறிவிட்டார்கள். அப்புறம் மியூசிக்ல போறதா இல்ல புரொடக்‌ஷன் –ல போறதா என்று தெரியாமல் அவஸ்தைப்பட்டேன்.

அப்போது ஒரு சபதம் எடுத்தேன். பி.எஸ் கோபாலஸ், நான் எல்லாரும் சேர்ந்து, பிரபல நடனரிடம் டான்ஸ் கத்துக்க போனோம். ஆனால் பிறகு விட்டுவிட்டோம் என்று கூறி முடிப்பதற்குள் குறுக்கிட்ட கமல், நீங்கள் சொல்வது உண்மைதான். நான் கூட சரிகமபதநி அரைகுறையாக பாடக் கத்துக்கிட்டதாலதான் இன்னைக்கு ஓரளவுக்காவது பாட முடியுது என்று கூறினார்.

அப்போது எம்எஸ்வி சாகர் சங்கமம் படத்தில் அசாத்தியமாக ஆடியது குறித்து கமலிடம் கேட்டார். அதற்கு, கமல், நான் கோபிகிருஷ்ணா வேண்டுமென அடம்பிடித்தேன். அந்த பாடல் அவர் தான் கம்போஸ் பண்ணது தான். அவர் வரும் போதே யார் இந்த பையன்? நல்லா ஆடுவானாமே என்ற எண்ணத்தில் தான் வந்தார்.

பிறகு ஒரு மூன்று நாள் ரிகர்சலில், கால் எல்லாம் கடுத்து விட்டது. ஆனாலும் அது எனக்கு பிரயோஜமாக இருந்தது. நான் நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன் என்று கூறினார். மேலும் இந்த பேட்டியின் போது, எம்.எஸ்.வி போட்டு, அவரே மறந்து போன ட்யூனை கமல்ஹாசன் அவருக்கு நினைவுப்படுத்தினார்.

இப்படி கமல், எம்எஸ்வி இருவரும் மாறிமாறி தங்கள் அனுபவங்களை பகிர்ந்த கொண்ட அந்த பழைய விண்டேஜ் வீடியோ இதோ!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Kamalhassan and ms viswanathan old interview video goes viral

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express