/indian-express-tamil/media/media_files/2025/09/15/koomapatty-2025-09-15-15-54-41.jpeg)
'ஏங்க' என்ற வார்த்தையின் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானவர் கூமாபட்டி தங்கபாண்டி. ஒரு காலத்தில் தனது கிராமமான கூமாப்பட்டியைப் பற்றிய வீடியோக்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார். அவரது தனித்துவமான பேச்சு மற்றும் உடல்மொழி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதன் மூலம் ஒரே ஒரு வீடியோவில் ஓஹோன்னு வாழ்க்கை என்ற நிலை தங்கபாண்டிக்கு உருவானது. இவரது புகழ் சமூக வலைத்தளங்களை கடந்து, ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பிரபலமான 'சிங்கிள் பசங்க' ஷோவிலும் இவருக்கு ஒரு வாய்ப்பை பெற்றுத்தந்தது.
இந்த ஷோவில் தங்கபாண்டி இணைந்தது, அவரது கலைப்பயணத்தில் ஒரு புதிய அத்தியாயமாக அமைந்தது. 'சிங்கிள் பசங்க' ஷோவில் அவர் தனது இயல்பான கிராமத்து பேச்சையும், கலகலப்பான நகைச்சுவையையும் வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார். இந்த ஷோவில் அவருக்கு ஜோடியாக, தமிழ் சீரியல் நடிகை சாந்தினி பிரகாஷ் நடித்தார்.
நடிகை சாந்தினி பிரகாஷ், சன் டிவியில் ஒளிபரப்பான 'பிரியமானவள்' தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானவர். தற்போது விஜய் டிவியின் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் நடித்து வருகிறார். அத்துடன், 'ராஜா ராணி', 'சரவணன் மீனாட்சி', 'காற்றின் மொழி' போன்ற பல பிரபல சீரியல்களிலும் நடித்துள்ளார். இத்தகைய அனுபவம் வாய்ந்த நடிகை சாந்தினி, கிராமத்து கலைஞரான தங்கபாண்டிக்கு ஜோடியாக நடித்தது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
தங்கபாண்டி, சாந்தினி இருவரும் இணைந்து நடித்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. குறிப்பாக, 'சூரியவம்சம்' திரைப்படத்தின் 'சலக்கு சலக்கு' பாடலுக்கு இருவரும் இணைந்து ஆடிய நடனம் பலரையும் ஆச்சரியப்படுத்தியது. சமீபத்தில், கமல்ஹாசன் நடித்த 'தேவர் மகன்' திரைப்படத்தின் 'இஞ்சி இடுப்பழகி' பாடலுக்கான ஷூட்டிங் காட்சி வீடியோக்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பெரும் கவனம் பெற்றுள்ளன. ரீல்ஸில் தொடங்கிய தங்கபாண்டி, இப்போது சின்னத்திரையின் பிரபலங்களுடன் இணைந்து தனது திறமையை நிரூபித்து வருகிறார்.
தங்க பாண்டி நீ போகாதே எல்லை தாண்டி 🤗😍🥰
— Anshitha🫶💖🍉 (@Anshithaprincey) September 15, 2025
இஞ்சி இடுப்பழகி பாடலுக்கு ஆடிய கூமாபட்டியார் பேர் ❤️ pic.twitter.com/S8440MeRtp
இந்த வீடியோவில் அவர் கமல் போல வேடமிட்டு கிணற்று பக்கம் வரும் காட்சிகள், கோலமிடும் காட்சிகள் என அனைத்து காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. அதுமட்டுமின்றி ரேவதியை கமல் கிணற்றில் தள்ள முயற்சித்து விளையாடுவதுபோல ஒரு காட்சி இருக்கும். அந்த காட்சியும் இதில் இடம்பெற்றுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.