Advertisment

கமல்ஹாசனின் இந்தியன் 2; இந்த 4 பிரபல நடிகர்களுக்கு கடைசி படம்

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2; நான்கு பிரபல நடிகர்களுக்கு கடைசி படமாக அமைந்த சோகம்

author-image
WebDesk
New Update
indian 2

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2; நான்கு பிரபல நடிகர்களுக்கு கடைசி படமாக அமைந்த சோகம்

கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம், நான்கு பிரபல நடிகர்களுக்கு கடைசி படமாக அமைந்துள்ளது.

Advertisment

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் 'இந்தியன் 2' திரைப்படம் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 1996 இல் வெளியான 'இந்தியன்' முதல் பாகம் பான் இந்திய பிளாக்பஸ்டர் படமாக இருந்தது. மேலும், கமலுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் இந்தப் படத்திற்காக கிடைத்தது.

இந்தநிலையில், இந்தியன் 2 ஆம் பாகம் தயாராகி வருகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் 'இந்தியன் 2' படத்திற்கு அனிருத் இசையமைக்க, ரவிவர்மா ஒளிப்பதிவு செய்கிறார். ஏ. ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு மற்றும் டி.முத்துராஜ் கலை இயக்க பணிகளை செய்கின்றனர்.

இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம், டெல்லி கணேஷ், ஜெகன், காளிதாஸ் ஜெயராம், குல்ஷன் குரோவர், ஜாகீர் ஹுசைன், பியூஷ் மிஸ்ரா, அகிலேந்திர மிஸ்ரா மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர்.

தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகும் 'இந்தியன் 2' இன் அறிமுக வீடியோவை ரஜினிகாந்த், மோகன் லால், அமீர்கான், கிச்சா சுதீப் மற்றும் எஸ்.எஸ்.ராஜமௌலி ஆகியோர் வெளியிட்டனர். அறிமுக வீடியோவுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. மேலும் 'இந்தியன் 3' தயாராகி வருவதாகவும், 2025 இல் வெளியிடப்படும் என்றும் அதன் தொடர்ச்சி 2024 கோடையில் வெளியிடப்படும் என்றும் சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இதற்கிடையில் 'இந்தியன் 2' அறிமுக வீடியோ விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு மற்றும் மாரிமுத்து ஆகிய நான்கு பழம்பெரும் நடிகர்களின் காட்சிகளைக் காட்டுகிறது. இந்த நடிகர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த நடிகர்களின் கேரக்டர்களை தக்கவைத்துக்கொண்ட ஷங்கருக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்தியன்முதல் பாகத்தில் நடித்த நெடுமுடி வேணு, இரண்டாவது படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்தார். அவர் அக்டோபர் 2021 இல் காலமானார்.

நகைச்சுவை மற்றும் குணச்சித்திரக் கலைஞரான விவேக் தனது வாழ்க்கையில் முதல் முறையாக கமல்ஹாசனுடன் இந்தப் படத்தில் இணைந்தார். இது விவேக்கின் நீண்ட கால கனவு மற்றும் நனவான வாய்ப்பு ஆகும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக விவேக் 17 ஏப்ரல் 2021 அன்று காலமானார்.

கமலின் இளம் வயதிலிருந்தே நெருங்கிய நண்பரான நடிகரும் இயக்குனருமான மனோபாலாவும் 'இந்தியன் 2' படத்தில் நடிப்பதில் மகிழ்ச்சி அடைந்தார். இவர் சமீபத்தில் மரணம் அடைந்தார்.

சமீபத்தில் செப்டம்பர் 8ஆம் தேதி மறைந்த மற்றொரு குறிப்பிடத்தக்க நட்சத்திரம் மாரிமுத்து ஆவார். இப்படியாக நான்கு பிரபல நடிகர்களின் கடைசி படமாக இந்தியன் 2 அமைந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Vivek Kamalhaasan indian
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment