Advertisment

’அதிகார வர்க்கத்துக்கு அறைகூவல் நீயே’; இந்தியன் 2 படத்தின் பாரா பாடல் வெளியீடு

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்தின் முதல் பாடல் வெளியீடு; அனிருத் – பா.விஜய் காம்பினேஷன் எப்படி?

author-image
WebDesk
New Update
indian para

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்தின் முதல் பாடல் வெளியீடு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தின் முதல் பாடலான பாரா இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1996-ம் ஆண்டு வெளியான படம், ‘இந்தியன்’. இந்தப் படத்தில் சுகன்யா, மனீஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர், கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தப் படத்தின் அடுத்த பாகம் ‘இந்தியன் 2’ என்ற பெயரில் இப்போது உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, நெடுமுடி வேணு, மனோபாலா உட்பட பலர் நடித்துள்ளனர்.

பான் இந்தியா படமான இந்தியன் 2 தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் இரண்டு பாகங்களாக வெளியாகிறது. இந்தப் படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், படம் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்தநிலையில், படத்தின் முதல் பாடலான பாரா இன்று (மே 22) இணையத்தில் வெளியாகியுள்ளது. முன்னதாக நேற்று இந்தியன் 2 படத்தின் பாரா பாடலின் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டது. தற்போது பாரா பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அனிருத் இசையமைத்துள்ள இந்தப் பாடலை பா.விஜய் எழுதியுள்ளார். அனிருத்துடன் இணைந்து ஸ்ருதிகா சமுத்ராலா பாடியுள்ளார். இந்தப் பாடல் வீரத்தை பறைசாற்றும் வகையில் எழுதப்பட்டுள்ளது. 

“பாரா வருவது ஓராட் படையா...வீரா விழுப்புண் அலங்காரா” என தொடங்கும் பாடலில் “எம் தாய் மண் மேல் ஆணை, இது தமிழ் மானத்தின் சேனை, வெள்ளை ரத்தம் தொட்டு வாளில் ஏற்று சாணை”, “அடிமைகள் ரத்தத்துக்கு வெப்பம் தந்த வீரத் தீயே” “அதிகார வர்க்கத்துக்கு அறைகூவல் நீயே” போன்ற வரிகள் ரசிக்க வைக்கின்றன.

இந்தநிலையில், யூடியூபில் பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முதல் பாடலே தமிழ் வீரம், தமிழர் காதல், வெள்ளையர் எதிர்ப்பு என உள்ளடக்கி வெற்றிப்பாடலாகி விட்டது! என ரசிகர் ஒருவர் பதிவிட்டுள்ளார். தமிழ் மட்டுமே காதில் ஒலித்தது. அருமையான வரிகள். ஆங்கில கலப்படமில்லாத வரிகள். மீண்டும் வருக இந்தியன் தாத்தா என்று மற்றொரு பதிவர் கமெண்ட் செய்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Kamalhaasan Anirudh Indian 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment