/tamil-ie/media/media_files/uploads/2023/05/Deepika-and-Raja.jpg)
கனா காணும் காலங்கள் சீரியல் நடிகர்கள் தீபிகா - ராஜா வெற்றிபிரபு (புகைப்படம் - இன்ஸ்டாகிராம்)
சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட ராஜா வெற்றி பிரபு – தீபிகா ஜோடியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தீபிகாவை விட ராஜா வெற்றி வயதில் சிறியவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு தீபிகா தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றத் தொடர் கனா காணும் காலங்கள். பள்ளிப்பருவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கனா காணும் காலங்கள் தொடர் வெற்றிகரமாக ஓடியது. இதில் நடித்த நடிகர்கள் தற்போது சின்னத்திரை சீரியல்களில், முன்னணி ஹீரோ, ஹீரோயின்களாக கலக்கி வருகிறார்கள்.
இந்த கனா காணும் காலங்கள் தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்கள் தீபிகா மற்றும் ராஜா வெற்றி பிரபு. இதில் தீபிகா அபி என்கிற கேரக்டரிலும், ராஜா வெற்றி பிரபு கெளதம் என்கிற கேரக்டரிலும் நடித்திருந்தார். இவர்கள் இருவரும் தான் தற்போது குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இவர்களது திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைராக பரவி வருகிறது.
இதனிடையே தீபிகாவை விட ராஜா வெற்றி பிரபு வயதில் சிறியவர் என்று தகவல் வெளியான நிலையில், இது குறித்து தீபிகா லைவ் விடியோவில் விளக்கம் அளித்துள்ளார். இதில் என்னை விட ராஜா வெற்றி சிறியவர் எல்லாம் கிடையாது. நான் உயராமாக இருப்பதால் என் முகம் வயதில் மூத்தவள் போலவும், அவன் முகம் சிறியதாக இருப்பதால் வயதில் சிறியவன் போலவும் தெரிகிறது.
உண்மையிலேயே அவன் 96 ல் பிறந்தவன் நான் 97-ல் பிறந்தவள. என்னை விட அவன் ஒரு வருடம் 10 மாதம் பெரியவன் என்று கூறியுள்ளார். மேலும் இந்த லைவ் வீடியோவில் ரசிகர்கள் பலரும் தம்பதிக்கு வாழ்த்தக்களை தெரிவித்துக்கொண்ட நிலையில், இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.