scorecardresearch

Kanaa in Tamilrockers: ‘கனா’ படத்தையும் விட்டு வைக்காத தமிழ் ராக்கர்ஸ்

Tamilrockers Leaked Kanaa Full Movie Online: பெண் கிரிக்கெட் வீராங்கனையாக ஐஸ்வர்யா ராஜேஷ் உருவாகி சாதிக்கும் கதை.

Tamilrockers Leaked Kanaa Movie:தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்ட கனா
Tamilrockers Leaked Kanaa Movie:தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்ட கனா

Sivakarthikeyan’s Kanaa Full Movie Leaked in Tamilrockers: கனா திரைப்படத்தை ஆன் லைனில் வெளியிட்டு தமிழ் ராக்கர்ஸ் அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. தரமான படத்தை தயாரித்து ரசிகர்களின் பார்வைக்கு வெளியிட்ட சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் இதனால் இழப்புகளை சந்திக்கிறது.

தமிழ் ராக்கர்ஸ் என்கிற பைரசி இணையதளம், சினிமா உலகுக்கு வில்லனாக இருந்து வருகிறது. வெப் சீரியல்களில் ஆரம்பித்து, கோலிவுட் முன்னணி நடிகர்களின் படங்கள், மாலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என சரமாரியாக உலக அளவில் முக்கிய படங்கள் பலவற்றையும் தனது இணையதளத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறது.

Tamilrockers Leaked Kanaa Movie:தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்ட கனா
Tamilrockers Leaked Kanaa Movie:தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்ட கனா

kanaa movie in tamilrockers: தமிழ் ராக்கர்ஸின் இந்த தொடர் அட்டகாசத்திற்கு எப்போது முடிவு?

அண்மையில் தமிழில் ரிலீஸான 2.0, சர்கார், சாமி 2, சீமராஜா, மாரி 2, அடங்க மறு என பல படங்களையும் வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ். கடந்த 21-ம் தேதி வெளியான படங்களில், ‘கனா’ பல்வேறு தரப்பினரிடமும் வரவேற்பை பெற்ற ஒரு படம்.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில், அருண் காமராஜா இயக்கத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்த படம் இது. பெண் கிரிக்கெட் வீராங்கனையாக ஐஸ்வர்யா ராஜேஷ் உருவாகி சாதிக்கும் கதையை இந்தப் படத்தில் அமைத்திருக்கிறார்கள்.

பெண்கள் முன்னேற்றத்தை அடிப்படை கருவாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்தப் படம், நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்தச் சூழலில் கனா படத்தின் முழுக் காட்சிகளையும் தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டிருக்கிறது. இது படத் தயாரிப்பு நிறுவனத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

தமிழ் ராக்கர்ஸின் இந்த செயலால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு படத்தை தயாரித்த சிவகார்த்திகேயனின் பட நிறுவனம் இழப்புகளை சந்திப்பதுடன், இந்தப் படத்திற்காக தங்களின் வியர்வையை ரத்தமாக சிந்தி உழைத்த கலைஞர்களின் உழைப்பும் அவமதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ராக்கர்ஸின் இந்த தொடர் அட்டகாசத்திற்கு எப்போது முடிவு?

 

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Kanaa full movie download tamilrockers illegal