சிவகார்த்திகேயன் தயாரிப்பில், அருண் காமராஜ் இயக்கத்தில் வெளியான கனா படத்தில் இடம்பெற்றுள்ள சவால் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.
Advertisment
கடந்த வாரம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சீதக்காதி, மாரி 2, அடங்க மறு, கனா, சிலுக்குவார்ப்பட்டி சிங்கம், கே.ஜி.எஃப் ஆகிய 6 படங்கள் வெளியானது. இந்த 6 படங்களில் 4 படங்கள் வசூலில் மண்ணை கவ்வ, கனா மற்றும் அடங்க மறு படமே ஹிட் அடித்தது.
சவால் பாடல் வீடியோ ரிலீஸ்
பெண்கள் கிரிக்கெட் அணி வெற்றியை கதையின் கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படத்தில் இடம்பெற்றுள்ள சவால் பாடல் வீடியோவை படக்கூழுவினர் வெளியிட்டுள்ளனர்.
Advertisment
Advertisements
குறிப்பாக ஐஸ்வர்யா ராஜேஷ் பயிற்சி எடுப்பது போலவும், சிவகார்த்திகேயன் பெண்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கும் காட்சிகள் பலரும் கவர்ந்துள்ளது. இப்பாடல் வீடியோ வெளியான சில மணி நேரத்திலேயே ஒரு லட்சத்து 74 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.